தும்கூரு: கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா என்ற பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மருமகன் டாக்டர் ராமச்சந்திரப்பா மற்றும் அவருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொரட்டகரேவைச் சேர்ந்தவர் லட்சுமி தேவம்மா. இவரது மருமகன் டாக்டர் ராமச்சந்திரப்பா. இவர் பல் மருத்துவர் ஆவார். இந்த நிலையில் சமீபத்தில் லட்சுமி தேவம்மா காணாமல் போய் விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் அவரது கணவர் பசவராஜ்.

இந்தப் பின்னணியில் கொரட்டகரே கிராமத்தில் உள்ள ஒரு சாலையில் ஒரு பெண்ணின் தலை மற்றும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலின் பாகங்கள், பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு, அழுகிய நிலையில் ஆங்காங்கே கிடந்துள்ளன. ஆகஸ்ட் 7ம் தேதி சில உடல் பாகங்களும், 8ம் தேதி சில பாகங்களும் என அடுத்தடுத்த நாட்களில் இந்த உடல் பாகங்கள் சிக்கின. இந்தப் பகுதியானது மாநில காவல்துறை அமைச்சரின் தொகுதிக்குட்பட்டதாகும். எனவே மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது லட்சுமி தேவம்மா என்று தெரிய வந்தது. மொத்தம் 19 துண்டுகளாக உடலை வெட்டியிருந்தனர். சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடந்து வந்த தீவிர தேடுதலில் டாக்டர் ராமச்சந்திரப்பா சிக்கினார். அவருடன் கூட்டாளிகள் கிரண் மற்றும் சதீஷ் என இருவரும் சிக்கினர்.
லட்சுமி தேவம்மாவின் நடத்தை சரியில்லாமல் இருந்துள்ளது. அவர் தவறான பாதையில் போக ஆரம்பித்திருக்கிறார். கூடவே தனது மகளையும் அதில் ஈடுபடுத்தப் பார்த்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் டாக்டர் ராமச்சந்திரப்பா. மாமியாரிடம் புத்திமதி சொல்லியும் அவர் கேட்கவில்லை போலும். இதனால்தான் கூட்டாளிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!
மியாமி ஜி 20 மாநாடு.. தென் ஆப்பிரிக்க அழைக்கப்படாது.. அமெரிக்கா முடிவு!
ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!
ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!
அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!
முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்
{{comments.comment}}