அய்யா.. எனக்கு பொண்ணு பாத்து கொடுங்க.. சீரியஸாக கேட்ட விவசாயி.. அப்படியே ஷாக் ஆன கலெக்டர்!

Jun 27, 2024,10:02 AM IST

கொப்பல்: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் நடத்திய மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சிக்கு வந்த ஒரு இளம் விவசாயி, தனக்கு கல்யாணம் செய்ய பெண் பார்த்துத் தர வேண்டும் என்று கோரி மனு கொடுத்ததால் கூட்டமே கலகலப்பானது. 


மாவட்டந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் அனைத்து மாநில கலெக்டர் அலுவலகங்கள் சார்பாகவும் நடத்தப்படும். அந்த வகையில், கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் நளினி அதுல் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். பல்வேறு தரப்பினரும் வந்து கலெக்டரிடம் புகார்களைக் கொடுத்தனர். அவற்றுக்கு தீர்வு அளித்தபடி இருந்தார் கலெக்டர் நளினி அதுல்.




அப்போது சங்கப்பா என்ற இளம் வயதுடைய விவசாயி ஒருவர் வந்தார். அவர் கொடுத்த புகார் மனுவை வாங்கிப் பார்த்த கலெக்டர் அப்படியே ஆடிப் போய் விட்டார். சங்கப்பாவை நிமிர்ந்து பார்த்தபோது அவரிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. கலெக்டரின் முகத்தில் இப்போது புன்னகை தவழ ஆரம்பித்தது. விவசாயி சங்கப்பாவும் தன்னிடமிருந்த மைக்கில், எனக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குது. விவசாயி என்பதால் யாரும் பெண் தரமாட்டாங்கிறாங்க. நீங்கதான் பார்த்துக் கொடுக்கணும் என்று கூற கூட்டமே கலகலப்பானது.


சங்கப்பா அத்தோடு நிற்காமல், பத்து வருஷமா பொண்ணு தேடிட்டிருக்கேன்.. ஒருத்தரும் என்னைக் கட்டிக்க, மாட்டேங்கிறாங்க என்று கூறினார். அவரது முகமே சீரியஸாக இருந்தது. வருத்தம் தெறித்தது. மேடையில் இருந்தவர்களால் சிரிக்கவும் முடியவில்லை. சிரிப்பை அடக்கவும் முடியவில்லை. எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து இதை எப்படி தீர்ப்பது என்று குழப்பத்துடன் காணப்பட்டனர்.


சங்கப்பா தனது பேச்சின் முடிவில், யாராவது ஒரு புரோக்கரிடம் சொல்லி எனக்கு பெண் பார்த்துத் தரச் சொல்லுங்க கலெக்டர் அய்யா என்று கூறியபோது கலெக்டரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.


ஒவ்வொருத்தருக்கும் எப்படியெல்லாம் பிரச்சினை வருது பாருங்க. சங்கப்பாவுக்கு அவர் நினைத்தபடி, அவரது மனசுக்கேற்ற, நல்ல குணவதியான ஒரு பெண் கிடைக்க நாமும் சேர்ந்து வேண்டிக் கொள்வோம்.. ஊருக்கெல்லாம் சோறு போடற சங்கப்பா, சீக்கிரமே கல்யாணச் சாப்பாடும் போடட்டும்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்