பெங்களூரு: பெங்களூருவில், கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் வீட்டில் தனியாகஇருந்ததை நோட்டமிட்டு வெட்டிக் கொலை செய்துள்ளனர். அந்தப் பெண் அதிகாரி கர்நாடக மாநில அரசின் சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். கொல்லப்பட்ட அதிகாரிக்கு வயது 37 ஆகிறது.
கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் பிரதீமா. கர்நாடக மாநில சுரங்கம் மற்றும் மண்ணியல் துறையில் துணை இயக்குநராக இருந்து வந்தார். இவரது வீடு குவெம்பு நகரில் உள்ள தொட்டகள்ளசந்திரா பகுதியில் உள்ளது. இது வாடகை வீடாகும். இவரது கணவர் வெளியூர் போயிருந்தார். வீட்டில் பிரதீமா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீடு பூட்டியே கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தபோதுதான் பிரதீமா கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கொல்லப்பட்ட பிரதீமாவின் தனது சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். பிரதீமா எல்லோரிடமும் நன்றாக, அன்பாகப் பேசக் கூடியவராம். இதுகுறித்து அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,எட்டு வருடமாக பிரதீமா குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார்கள். அவர்களால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. மிகவும் அன்பானவர்கள் என்றார்.
சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால் சுரங்க லைசென்ஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏதாவது அவருக்கு இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}