பெங்களுரு : கமல் நடித்த தக்லைஃப் படம் தொடர்பான வழக்கை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கர்நாடக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த படம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையும் ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் ஜூன் 05ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு, கலவையான விமர்சனங்களை பெற்றது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானதாக தெரிவித்தார். கமலின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கன்னட அமைப்புகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது.
எதிர்ப்புகள் அதிகரித்து வந்ததால் தக்லைஃப் படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எதன் அடிப்படையில் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது கூறினீர்கள்? மக்களின் உணர்வுகளை காயப்படும் கருத்துக்களை யார் பேசினாலும் ஏற்க முடியாது எனக் கூறி கமலை மன்னிப்பு கேட்கும் படி கூறியது. ஆனால் கமல், மன்னிப்பு கேட்க முடியாது என உறுதியாக மறுத்து விட்டார். இதனால் தயாரிப்பு நிறுவனமே கர்நாடகாவில் தக்ஃலைப் படத்தின் ரிலீசை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

இதற்கிடையில் கர்நாடக தியேட்டர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தக்லைஃப் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு தீ வைக்கப் போவதாக மிரட்டல்கள் வருவதால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீ வைத்தால் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இருந்தாலும் தொடர்ந்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.
கர்நாடகா ஐகோர்ட்டில் ஏற்கனவே நடந்து வந்த தக்லைஃப் படத்தின் வழக்கை ஜூன் 10ம் தேதி விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்...5 கி.மீ.,க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் முடிந்தது...மொத்தம் 12.80 லட்சம் பேர் விண்ணப்பம்
இன்று டில்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக ஆஜராகிறார் விஜய்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
{{comments.comment}}