பெங்களூர்: முடா முறைகேடு வழக்கில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என கர்நாடகா உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டு, நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியது.இந்த இடம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அரசுக்கு 4000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தேவை என்பதால், சமூக ஆர்வலர்கள் மூவரும் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தனர். இந்த முடா முறைகேடு குறித்து முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கர்நாடக ஆளுநர் ஆகஸ்ட் 17ம் தேதி அனுமதி கொடுத்தார். இதனை எதிர்த்து முதல்வர் சித்தராமையா தரப்பில் ஆகஸ்ட் 19ம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா கூறுகையில், தன் அதிகாரத்தை பயன்படுத்தி சுதந்திரமாக விசாரணைக்கு அனுமதி வழங்கிய ஆளுநரின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. அதை எதிர்த்து மனு தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், புகார் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், முதல்வரின் நடவடிக்கையால் பலன் பெற்றவர்கள் வெளியாட்கள் அல்ல, முதல்வர் சித்தராமையாவின் குடும்ப உறுப்பினர்களே பயன் பெற்றுள்ளார்கள். சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி அளித்த ஆளுநரின் உத்தரவு எந்த விதத்திலும் உள்நோக்கம் கொண்டதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதனால் சித்தராமையா விசாரணையை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
அஞ்ச மாட்டேன்- சித்தராமையா
இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா, பாஜக - மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்களின் சதிச் செயலுக்காகவோ அல்லது ராஜ்பவனின் அதிகார துஷ்பிரயோகம் கண்டோ நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன். கர்நாடக மக்கள் என்னுடனும், எனது அரசுக்கு ஆதரவாகவும் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}