லதா மல்லிகார்ஜூன்... பாஜகவை வீழ்த்திய சுயேச்சை..  காங்கிரஸுக்கு நிபந்தனையில்லாத ஆதரவு!

May 15, 2023,11:34 AM IST
பெங்களூரு: கர்நாடக  மாநிலம் ஹரப்பனஹள்ளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்ற லதா மல்லிகார்ஜூன், காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் கர்நாடக துணை முதல்வர் எம்.பி. பிரகாஷின் மகள்தான் லதா மல்லிகார்ஜூன். காங்கிரஸ் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தத் தேர்தலில் இவர் சுயேச்சையாக ஹரப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட கருணாகர ரெட்டியை 13,845 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளரான அகில இந்திய பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவை நேரில் சந்தித்த அவர் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.



இதுகுறித்து சுர்ஜிவாலா கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு லதா மல்லிகார்ஜூன் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவர் கொள்கை ரீதியாக காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தைக் கொண்டவர். அவருக்கும், அவரது கணவர் மல்லிகார்ஜூனுக்கும், நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தனை பேரும் சேர்ந்து 6.5 கோடி கன்னடர்களின் நலனுக்காக உழைப்போம் என்றார் சுர்ஜிவாலா.

எம்.பி. பிரகாஷ் சோசலிசவாதி ஆவார். ஜனதா குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது கடைசிக்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் துணை முதல்வராகவும் இருந்தார். சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அபார வெற்றி கிடைத்தது. 135 இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. இதனால் யாருடைய துணையும் இல்லாமல் தனித்து அது ஆட்சியமைக்கவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்