ரீல்ஸ், ரிஸ்க் எல்லாம் நல்லதுதான்.. ஆனால் Life?.. கவனமா இருங்க யூத்ஸ்!

Jul 25, 2023,10:31 AM IST

- சகாயதேவி 


பெங்களூரு: இந்த தலைமுறை எந்த அளவுக்கு ஜாலி ஜாலி என வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கிறதோ அதே அளவுக்கு கூடுதல் கவனத்தை செலுத்தவும் சமயங்களில் மறந்து விடுகிறது. இப்படித்தான் ஒரு இளைஞர் தனது உயிரைப் பரிதாபமாக பறி கொடுத்துள்ளார் கர்நாடகாவில்.


விளையாட்டு எப்போதுமே விபரீதத்தில்தான் முடியும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.


கர்நாடகா மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். 23 வயதான இவர் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஷிவமொக்கா மாவட்டம் கொல்லூர் அருகே உள்ள அரசினகுன்டி நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தார். கன மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பேயாய் கொட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்த பாறைகள் எல்லாம் ஈரத்தில் வழுவழுப்புத்தன்மையுடன் காணப்பட்டன. 


இந்த பின்னணியில் இன்ஸ்டாகிராமுக்காக ரீல்ஸ் எடுக்க ஆரம்பித்தனர் சரத்குமார் நண்பர்கள். இதற்காக சரத்குமார் உயிரையும் பணயம் வைத்து, உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அபாயகரமான ஒரு பாறை மீது ஏறி நின்று ரீல்ஸுக்காக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கால் ஸ்லிப் ஆகி கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக போய்க் கொண்டிருந்த நீரில் விழுந்தார். 


என்ன நடந்தது என்பதை ஊகிக்கும் முன்பாகவே அவர் நீரில் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்.  இந்த சம்பவம் முழுவதும் அவரது நண்பர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.


இளம் சமுதாயத்தினருக்கு ரீலிஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இது போன்ற சம்பவங்கள் நமக்கு ஒரு அலெர்ட் மெசேஜ் தான் மக்களே. மலை முகடுகளில் நிற்பது,  காட்டு வெள்ளம் போகும்போது அங்கு போய் ரீல்ஸ் எடுப்பது, புயல் வீசும்போது கடலுக்கு பக்கத்தில் போய் செல்பி எடுப்பது..  என பல இடங்களில் ரிஸ்க் எடுத்து லைக் வாங்குவது திரில்லானது தான் என்றாலும் கூட இதெல்லாம் உங்களது வாழ்க்கைக்கும் உலை வைத்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது.


சமூக வலைத்தளங்களில் நீங்கள் ரிஸ்க் எடுத்து எடுக்கும் இது போன்ற வீடியோக்கள் உங்கள் கடைசி விடியோவாக மாறும் அவலம் நிகழும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்