- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : எத்தனை செல்வங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் மழலை செல்வத்திற்கு ஈடாகாது என்பார்கள். பெண்மை முழுமை பெறுவதும் தாய்மையில் தான் என்பார்கள். அப்படிப்பட்ட குழந்தை பாக்கியம் என்பது திருமணமான அனைத்து பெண்களுக்கும் எளிதில் கிடைத்து விடுவது கிடையாது. இன்றைய மாறி வரும் கால கட்டத்தில் குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவமனைகளை நாடுபவர்களின் எண்ணிக்கையும், அதற்காக ஏங்கி காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அப்படி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சென்று வழிபட வேண்டிய கோவில்கள் என எத்தனையோ இருந்தாலும், தமிழகத்தில் புகழ்பெற்றதாக திகழ்வது கும்பகோணம் மாவட்டம் திருக்கருக்காவூரில் அமைந்துள்ள கர்ப்பரக்ஷாம்பிகை அம்மன் கோவில் தான். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் அனைவராலும் கும்பகோணத்திற்கு சென்று வழிபட்டு, பலனடைய முடியாது. அப்படி கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் சென்னை வடபழனியில் அமைந்துள்ள கோவிலுக்கு வந்து வழிபடலாம்.

திருக்கருக்காவூரை போன்றே சென்னை வடபழனியிலும் கர்ப்பரக்ஷாம்பிகை சமேத முல்லைவனநாதர் என்ற திருநாமத்துடன் அம்பிகையும், சிவ பெருமானும் காட்சி தருகிறார்கள். ஏராமானவர்கள் இங்கு வந்து வழிபட்டு, குழந்தை வரம் பெற்றுள்ளனர். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இந்த ஆலயத்திற்கு வந்து, இங்குள்ள கடையில் பூஜைக்கு தேவையான மஞ்சள், பூ போன்ற பொருட்களை வாங்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். பிரார்த்தனைக்காக வருபவர்களை தனியாக அமர வைத்து, அம்பாளின் முகத்திற்கு மட்டும் நெய்யால் அபிஷேகம் செய்கிறார்கள். அம்மன் திருமுகத்தில் பட்டு, அருள் நிறைந்த இந்த நெய்யை தனியாக ஒரு பாட்டிலில் பிடித்து குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
இந்த நெய் பாட்டிலுடன் கர்ப்பரக்ஷாம்பிகையின் 48 போற்றிகள் அடங்கிய புத்தகம், சுவாமியின் படம் ஒன்றையும் கொடுக்கிறார்கள். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தினமும் தொடர்ந்து 48 நாட்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து கொடுக்கப்பட்ட இந்த நெய்யை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு, 48 போற்றிகளை படித்து, நம்பிக்கையுடன் அம்மனை மனதார வழிபட்டு வர வேண்டும். இப்படி நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு 48 நாட்கள் நிறைவடைவதற்கு முன்பாக குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது.
பிறகு ஏழாவது மாதத்தில் வந்து அந்த பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தும் போது அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதோடு காணிக்கை செலுத்தி, அம்மனுக்கு தைல காப்பு செலுத்தி, அந்த தைலத்தை வாங்கிக் கொண்டு போய் தினமும் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் தடவி வந்தால், அவருக்கு சுக பிரசவம் நடக்கும் என சொல்லப்படுகிறது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இருந்து அருளை வாரி வழங்கும் கர்ப்பரக்ஷாம்பிகையை நம்பிக்கையுடன் வழிபட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
கர்ப்பரக்ஷாம்பிகை ஸ்லோகம் :
ஹே ஸங்கர ஸமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத சரம்ப சரிசூட
ஹர திரிசூலின் சம்பே சுகப்ரஸவ
க்ருத் பவமே தயாளோ
ஹே மாதவி வனேஸ
பாலயமாம் நமஸ்தே!
ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே
ஸீரதர நாம யாஷினீ
தஸ்யா ஸ்மரண மாத்ரேணா
விசல்யா கர்ப்பிணி பவேது!!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}