- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 25 டிசம்பர் 2 ஆம் தேதி கார்த்திகை மாதம் 16 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நம் வீடுகளில் இன்று மாலை அனைவர் வீடுகளிலும் பரணி தீபம் ஏற்றுவது சாலச் சிறந்தது. ஏனெனில் நம்முடைய வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் பல பாவங்கள் செய்திருப்போம், இந்த பாவங்களில் இருந்து விடுபடவும் அவற்றினால் ஏற்படும் தீய பலன்களில் இருந்து விடுபடுவதற்காகவும் ஏற்றப்படும் தீபமே" பரணி தீபம் "ஆகும். திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாள் பரணி தீபம் அனுஷ்டிக்கப்படுகிறது. பரணி தீபம் எத்தனை ஏற்ற வேண்டும்,நேரம் மற்றும் பலன்கள் பற்றி பார்ப்போம்.
நேரம்: டிசம்பர் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 06:24 மணி முதல் தொடங்கி டிசம்பர் 03ஆம் தேதி புதன்கிழமை மாலை 04 :47 மணி வரை பரணி நட்சத்திரம் உள்ளது. எனவே சரியாக ஆறு6:30 மணிக்கு பரணி தீபம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஏற்றுவது சிறப்பு.
பரணி நட்சத்திரம் என்பது எமதர்ம ராஜாவிற்கு உரிய நட்சத்திரம் ஆகும். பரணி தீபம் மாலையில் வீடுகளில் ஏற்றுவதனால் நம் முன்னோர்கள் செய்த பாவங்கள் மட்டுமின்றி, நாம் பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.
திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் எப்போது?..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும். முதலில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றப்பட்டு பிறகு, மண்டபத்தில் ஐந்து பெரிய அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவார்கள். இவ்வாறு ஐந்து தீபங்கள் ஏற்றுவது சிவபெருமானின் ஐந்து தொழில்களான காத்தல், அழித்தல்,படைத்தல், அருளல்,மறைத்தல் ஆகிய ஐந்து முகங்களின் குணங்களையும்,ஐந்து தொழில்களையும் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
பரணி தீபம் எதற்காக ஏற்றுகிறோம் என்பதை பற்றி பார்ப்போம்...
நசுக்கியதன் என்பவர் எம தர்மராஜாவிடம் மனிதர்கள் அனைவரும் யமவாதனை இன்றி உய்வுநிலை அடைய வழி சொல்லுமாறு கேட்டார்.அதற்கு எமதர்மன் பல விஷயங்களை கூறி நசுக்கியதனை அனுப்பினார். அந்த பல விஷயங்களில் ஒன்றுதான் எமதர்மனுக்கு பிரியமான பரணி நட்சத்திரத்தில் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தீபம் ஏற்றுபவர்களுக்கு, அவர்கள் அறியாமல், தெரியாமல் செய்த பாவங்கள் நீக்கப்படும். முன்னோர்களுக்கும் இந்த உலகத்தில் நலன் கிடைக்கும். இந்த நாளில் சிவபெருமானை வணங்கி எமனையும் ஆராதனை செய்யும் தீபமாக ஏற்றப்படுவதே "பரணி தீபம் "ஆகும்.
வீடுகளில் பரணி தீபம் ஏற்றும் முறை:
பரணி தீபம் ஏற்ற மாலை 6:00 மணி முதல் தீபம் ஏற்றும் பணிகளை துவங்கி ஒரு பெரிய தாம் பாலம் அல்லது மனை பலகை மேல் பச்சரிசி மாவினால் கோலம் இட்டு, ஐந்து அகல் விளக்குகளில் மஞ்சள் குங்குமம் வைத்து,நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு மலர்களால் அலங்கரித்து பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். மேலும் பூஜை அறையில் அன்றாடம் ஏற்றும் விளக்குகள் மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பு. இந்த ஐந்து தீபங்களை கட்டாயம் இன்று ஏற்றுவது நம் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். பாப விமோச்சனம் பெறலாம். நம் வருங்கால சந்ததியினரும் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று வாழ்வார்கள்.
பஞ்சபூத ஸ்தலமான திருவண்ணாமலையில் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றுவது வழக்கம். கார்த்திகை தீபத் திருநாளில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து வகையான தீபங்கள் ஏற்றப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் ஐந்து அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றுவது பாவங்களில் இருந்து விடுபட எமதர்மனே ஏற்றச் சொல்லிய தீபம் என்று கூறப்படுகிறது. இந்த ஐந்து தீபங்களை நெய் விட்டும்,வீடுகளில்பிற இடங்களில் எரியும் தீபங்களை நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவது மிகவும் சிறப்பு.
அனைவருக்கும் திருக்கார்த்திகை வாழ்த்துக்கள். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?
நாம் தமிழரை கட்சியைப் போல அமமுகவும் தனித்து போட்டியா?.. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு
விராட் கோலியின் காலில் விழுந்த ரசிகர்.. மனுஷன் அப்படியே நெகிழ்ந்து போயிட்டாரு பாருங்க!
Sanchar Saathi app.. புதிய செல்போன்களில் இனி சன்சார் சாத்தி ஆப் கட்டாயம் இருக்க வேண்டும்!
சிம் இனி கட்டாயம் சிம்ரன்.. வாட்ஸ் அப், டெலிகிராம், அரட்டை செயலிகளுக்கு அதிரடி உத்தரவு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 02, 2025... இன்று வெற்றிகளை குவிக்கும் ராசிகள்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
{{comments.comment}}