- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : கார்த்திகை சோமவாரம் என்பது, கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு கடைபிடிக்கப்படும் வழிபாடு ஆகும். திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு இருக்கக் கூடிய விரதம் சோமவார விரதமாகும். இது கார்த்திகை மாதத்தில் வரும் போது கூடுதல் விசேஷமானதாக கருதப்படுகிறது.
திங்கட்கிழமை என்பது நவகிரகங்களில் சந்திரனுக்குரிய கிழமையாகும். இவரே மனக்குழப்பம், மன வேதனை, தடுமாற்றம், மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு காரணமானவராக கருதப்படுகிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை சிவபெருமான் நீக்கிய மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகிறது. அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்களில் சிவ பெருமானுக்கு விரதம் இருந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கும் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை சோமவாரத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் சங்காபிஷேகம் நடத்தப்படும். இதை சென்று தரிசிக்கலாம். இது தவிர வீடுகளில் மாலை நேரத்தில் வாசற்காலுக்கு அருகில் கோலமிட்டு நல்லெண்ணெய் அல்லது நெய்யால் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நிலைவாசலுக்கு அருகில் மேலே குறிப்பிட்டுள்ள கோலத்தை அரிசி மாவு அல்லது கோலமாவில் போடுவது சிறப்பு. இதனை சிவன் கண் கோலம் என்பார்கள். இதன் மத்தியில் வரும் அமைப்பு சிவனின் முக்கண் வடிவத்தை கொண்டதாக இருப்பதால் இதனை சிவன் கண் கோலம் என்கிறோம். இந்த கோலத்தை வாசலில் போடுவதால் சிவனின் அருள் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோலத்தை சுற்றி விளக்கேற்றி வைப்பது மிகவும் நல்லது.
சிவன் வேறு, முருகன் வேறு இல்லை என்பார்கள். கார்த்திகை மாதம் என்பது கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப் பெருமானுக்கும் உரிய மாதமாகும். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தின் வீட்டின் பூஜை அறையில் முருகப் பெருமானுக்குரிய ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுவதால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். இது தவிர கார்த்திகை சோமவாரத்தில் யாராவது இரண்டு பேருக்கு அன்னதானம் வழங்குவது மிக மிக சிறந்தது. தானங்களில் சிறந்த தானம் அன்னதானம் என்பதால், உலகிற்கே படியளக்கும் ஈசனுக்குரிய விரத நாளில் அன்னதானம் வழங்குவதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா
தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!
TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!
அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்
அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}