- மஞ்சுளா தேவி
சென்னை: நடிகர் ஜெய் நடிப்பில், அறம் பட இயக்குநர் கோபி நயினாரின் இயக்கத்தில், மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள கருப்பர் நகரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான படம்தான் அறம். மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட படம் அது. அப்படத்தின் இயக்குனர் கோபி நயினார். ஆழ்துளை கிணற்றில் ஒரு குழந்தை விழுந்து, அதை மீட்பது தொடர்பான கதை இது. வித்தியாசமான கதை களத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது கருப்பர் நகரம் படத்தை உருவாக்கியுள்ளார் கோபி நயினார். ஜெய் நாயகனாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும், ஜே டி சக்கரவர்த்தி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கே .எஸ் பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளிவந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது .அறம் படத்தைப் போலவே கருப்பர் நகரம் படத்தின் டீசர் வித்தியாசமான கதையை ஆக்ஷன் கலந்து சொல்லிருப்பது போல் தெரிகிறது. இந்த டீசர் எம்ஜிஆர் பாடல் வரிகளுடன் தொடங்கி "உடம்புல ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும்.." என்ற புரட்சிப் பொங்கும் வரிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}