கரூர்: கடுமையான காய்ச்சலில் வீழ்ந்த கரூர் எம்பி ஜோதிமணி இப்போதுதான் உடல் நலம் தேறி வந்துள்ளார்.
உடம்பு தேறி விட்டது. ஆனால் உடல் சோர்வு போகவில்லை என்று கூறியுள்ள ஜோதிமணி, பனிரெண்டு நாட்களுக்குப் பின் இன்று தான் வெளிச்சத்தையேப் பார்க்கிறேன் என்றும் டிவீட் போட்டுள்ளார்.
ஜோதிமணி ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் ஒரு சமூக சேவகர். மிக மிக ஆக்டிவாக செயல்படும் தமிழ்நாட்டு எம்.பிக்களில் முக்கியமானவர், முக்கியமாக ஃபைட்டர். 2019ம் ஆண்டு கரூர் மக்களவைக்கு காங்கிரஸ் சார்பாக தேர்தெடுக்கப்பட்டவர். தனது 22வயதில் இருந்து அரசியலில் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 12 நாட்களுக்கு முன்னர் கடுமையான காய்ச்சல் உடல் சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஜோதிமணி. சிகிச்சையின் பலனாக தற்பொழுது உடல் தேறிவரும் நிலையில் பணிக்கு திரும்பப் போவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், பனிரெண்டு நாட்களுக்குப் பின் இன்றுதான் உடலில் வெளிக்காற்றும், சூரிய ஒளியும் பட்டிருக்கிறது. கடுமையான காய்ச்சல் மிக மோசமான உடல் சோர்வு, இந்த சூழலில் அதிகம் வரும் அம்மாவின் நினவுகள் ஏற்படுத்துகிற மனச்சோர்வு என்று 12 நாட்களைக் கடப்பது ஒரு யுகம் போல இருந்தது.
இன்னும் உடல் சோர்வு இருக்கிறது. இம்மாதிரியான சூழலில் மனவலிமையும் மருந்தாக இருக்கும் என்பதை கடந்த காலங்களில் உணர்ந்திருக்கிறேன். அதனால் இன்று எப்படியிருந்தாலும் பணியைத் துவங்குவது என்ற முடிவோடு நடைபயிற்சிக்கு கிளம்பினேன்.
அன்பான சிரித்த முகங்கள், நல்ல காற்று,வெளிச்சம் மனதை லேசாக்கி இருக்கிறது. மிகுந்த அக்கறையோடு கவனித்துக் கொண்ட அன்புச் சகோதரர் மருத்துவர் சிவக்குமார், மருத்துவர் ஹேமா மற்றும் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}