அல்வா வகைகளுக்குப் பெயர் போனது நம்ம தமிழ்நாடு. திருநெல்வேலி அல்வா தொடங்கி பீட்ரூட் அல்வா வரை விதம் விதமான அல்வாக்களைக் கொடுப்பதில்.. அதாவது சாப்பிடுவதில் நம்மவர்கள் மிகப் பிரபலம். அப்படிப்பட்ட அல்வா வகைகளில் ஒன்றுதான் இந்த காசி அல்வா.
காசி அல்வா, தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னிந்தியா முழுவதும் தெரிந்த பெயர்தான். பிரபலமான இனிப்பும் கூட. குறிப்பாக பிராமணர்கள் வீட்டு விசேஷங்களில் இந்த காசி அல்வா மிகப் பிரபலமான ஒரு இனிப்பு. திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களிலும் இந்த காசி அல்வா தவறாமல் இடம் பெறும். வெள்ளை பூசணிக்காயில் செய்யப்படுவதுதான் இந்த காசி அல்வா. சும்மா சொல்லக் கூடாது.. செம்ம டேஸ்ட்டியான இனிப்புங்க இது.
வெள்ளைப் பூசணிக்காய் ஒன்று பக்கத்து வீட்டிலிருந்து கிடைத்தது. உடனே காசி அல்வா செய்து சாப்பிட்டாச்சு.. அந்த சுவையான காசி அல்வாவை நீங்களும் செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க.. வேற லெவல் டேஸ்ட் அது.
சரி வாங்க எப்படிப் பண்ணலாம்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளைப் பூசணிக்காய் - 2 கப் (துருவியது)
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
முந்திரி, பாதாம் - 10-15 (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
கேசரி பவுடர் அல்லது ஆரஞ்சு கலர் (விருப்பமானால்) - ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில், வெள்ளைப் பூசணிக்காயைத் துருவி, அதில் உள்ள தண்ணீரை முழுவதும் பிழியவும். இது மிகவும் முக்கியம், இல்லையெனில் அல்வா நீர்த்துப் போகும்.
ஒரு அடிகனமான கடாயில், பிழிந்த பூசணிக்காய் துருவலைப் போட்டு, மிதமான தீயில் வதக்கவும். பூசணிக்காய் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பூசணிக்காய் நன்கு வதங்கியதும், சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை உருகி பூசணிக்காயுடன் சேர்ந்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
இந்த நேரத்தில், கலர் பவுடரை சிறிது தண்ணீரில் கலந்து அல்வாவுடன் சேர்க்கவும். இது அல்வாவுக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
அல்வா கெட்டியாக ஆரம்பித்ததும், கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு கிளறவும். நெய் முழுவதும் அல்வாவால் உறிஞ்சப்பட்டதும், மீண்டும் நெய் சேர்க்கவும்.
அல்வா கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் பதம் வந்ததும், ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, பாதாம் துண்டுகளைச் சேர்க்கவும்.
அல்வா நெய் பிரிந்து வரும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான காசி அல்வா தயார். இதை சூடாகவோ அல்லது ஆற வைத்தோ பரிமாறலாம்.
என்னங்க படிக்கிறப்பவே நாக்கு ஊறுதா.. யோசிக்காம பூசணிக்காயை வாங்கி செஞ்சு சாப்பிடுங்க.
கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
{{comments.comment}}