என்றும் இளமையுடன்...:!

Feb 12, 2026,03:34 PM IST

- கவிதா அறிவழகன்

     

புதியதாய்த் துளிர்த்த மென் சருமம்,

காலைப்பனியும் கனவுத் தென்றலும் போல...

கனவுகளுடன் ஓடித் தேய்ந்த முதிர்ந்த சருமம்,

மலரின் சிரிப்பையும், முட்களின் வலியையும் சுமந்தபடி.


தசாப்தங்கள் பல கடந்த அந்த தேகமானது,

அமைதியான ஒரு பழைய பாடலைப் பாடுகிறது...

ஒரு கை இளமை, மறு கை முதுமை,

வாழ்வின் இரு துருவங்கள் இங்கே கவிதையாய் சங்கமமாகிறது.




மேடுபள்ளங்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையானது,

ஏற்ற இறக்கங்களால் பக்குவப்பட்ட கதைகள் பல பேசியது...

நடுங்கும் கைகளில் வரைந்த வாழ்க்கைச் சித்திரமானது,

அந்திப்பொழுதில் உருவான ஒரு அழகிய பெருங்காவியம்.


பாதைகள் பிரியும் சந்தியில் நின்றாலும்,

நிதானம் காக்கட்டும் நிமிர்ந்த தலையுடன்...

இந்த ஒரு சிறு பயணம் நமக்கானது மட்டுமே,

இதயத்தையும் ஆன்மாவையும் போற்றி வளர்ப்போம்.....

தோற்றம் முதிர்ந்தாலும், விவேகமான எண்ணங்களால்

என்றும் இளமையுடன் வாழ்வோம்.


(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்