"சார் மேடம்" எல்லாம் தேவையில்லை.."டீச்சர்" மட்டும் போதும்.. கேரளாவில் புரட்சி!

Jan 16, 2023,10:57 AM IST
திருவனந்தபுரம் : ஆசிரியர்களை சார், மேடம் என்றெல்லாம் கூப்பிடத் தேவையில்லை. வெறுமனே டீச்சர் என்று கூப்பிட்டால் போதும் என்று கேரள மனித சிறார் உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



ஆசிரியர்களை பாலின பாகுபாட்டுடன் அழைப்பதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேரள சிறார் உரிமைகள் ஆணையத்திற்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அனைத்துப் பள்ளி ஆசிரியர்களையும், பாலின வேறுபாடு இன்றி அனைவருமே இனி  டீச்சர் என்று மட்டுமே சொல்ல வேண்டும். சார், மேடம் என்று சொல்லக் கூடாது என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சார், மேடம் என்பது பாலின வேறுபாட்டை வெளிக்காட்டுகிறது. மாறாக டீச்சர் என்பது பொதுப்படையாக உள்ளது, மரியாதைக்குரியதாகவும் இருக்கிறது என்று ஆணையம் விளக்கியுள்ளது.

இதுதொடர்பான உரிய சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்புமாறு மாநில பள்ளிக் கல்வித்துறையையும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு

news

அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!

news

திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

அதிகம் பார்க்கும் செய்திகள்