காலைல 3 மணி இருக்கும்.. சேவல் கொக்கரக்கோன்னு கூவிருது.. கோர்ட்டுக்குப் போன அடூர் ராதாகிருஷ்ணன்!

Feb 19, 2025,06:26 PM IST

அடூர், கேரளா: கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன குருப் என்பவர் பத்தனம்திட்டா கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது கேரளாவையும் தாண்டி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். முதியவர். இவர்தான் கோர்ட்டுக்கு வந்து நூதன வழக்கைப் போட்டவர்.  பத்தனம் திட்டா கோர்ட்டில் ராதாகிருஷ்ண குருப் தாக்கல் செய்த மனுவில், எனது பக்கத்து வீட்டில் அனில்குமார் என்பவர் வசிக்கிறார். அவர் கோழி, சேவல் வளர்க்கிறார். அவரது வீட்டு சேவல் அதிகாலையிலேயே கூவ ஆரம்பித்து விடுகிறது.


விடாமல் அது கூவுவதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கே என்னை கூவி எழுப்பி விட்டு விடுகிறது. இதனால் எனது தூக்கம் கெட்டு பெரும் சிரமத்துக்குள்ளாகிறேன். அனில் குமாரிடம் இதுகுறித்துப் புகார் கூறியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்ல. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட்டு அந்த சேவலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.




இந்தப் புகாரை விசாரித்த கோர்ட், மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்டிஓ அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நேரடியாக அனில் குமார் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அனில் குமார் தனது சேவல், கோழிகளை வீட்டின் மொட்டை மாடியில் விட்டிருப்பது தெரிய வந்தது. அதில் உள்ள ஒரு சேவல்தான் குருப்பின் தூக்கத்தைக் கெடுப்பதும் தெரிய வந்தது. 


இதையடுத்து அனில்குமாரையும், ராதாகிருஷ்ண குருப்பையும் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தப்பட்ட சேவலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. அதாவது மொட்டை மாடியில் அந்த சேவலை வைக்காமல், வீட்டின்  தென் பகுதியில் உள்ள இடத்திற்கு மாற்ற அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. சேவலை இப்படி இடமாற்றம் செய்ய அவருக்கு 14 நாட்கள் அவகாசமும் அளிக்கப்ப்டுள்ளது.


சேவல் இடம் மாறிய பிறகாவது ராதாகிருஷ்ணன் குருப்பு நிம்மதியாக தூங்கட்டும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

news

அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு!

news

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு...ஆர்சிபி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்