பெற்ற மகளை... 8 மாதமாக சீரழித்த நபருக்கு.. 3 ஆயுள் தண்டனை!

Jan 31, 2023,09:18 AM IST
மலப்புரம்: பெற்ற மகள் என்று கூட பாராமல் சிறுமியை கிட்டத்தட்ட 8 மாத காலம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த  தந்தை என்ற மிருகத்திற்கு 3 ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது கேரள நீதிமன்றம். அவரது மீதமுள்ள வாழ்நாளை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.



கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது.  மஞ்சேரி விரைவு நீதிமன்ற சிறப்பு நீதிபதி ராஜேஷ் இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.  இந்த நபருக்கு ரூ. 6.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் சம்பந்தப்பட்ட சிறுமி (அப்போது அவருக்கு வயது 15) தனது வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்து வந்தார். அந்த மாதத்தில் முதல் முறை தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் இந்த முட்டாள்.

தந்தையின் செயலைப் பார்த்து அதிர்ந்து தடுக்க முயன்றுள்ளார் மகள். ஆனால் உனது தாயைக் கொன்று விடுவேன் என்று மிரட்டி தனது காரியத்தை சாதித்திருக்கிறார் அந்த நபர்.  அதன் பின்னர் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பல முறை இந்த அசிங்கத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவர் ஒரு முன்னாள் மதரசா ஆசிரியர் என்பதுதான் கொடுமையானது. நல் வழியைப் போதிக்க வேண்டிய நபரே இப்படி தீய வழியில் போயுள்ளார்.

நவம்பர் 2021 முதல் சிறுமி பள்ளிக்குப் போக ஆரம்பித்திருக்கிறார். அப்போது அவருக்கு வயிற்றில் வலி ஏற்படவே டாக்டர்களிடம் கூட்டிப் போயுள்ளனர். ஆனால் என்ன காரணம் என்பது டாக்டர்களுக்குத் தெரியவில்லை. 2022 ஜனவரியில் மீண்டும் வலி ஏற்படவே டாக்டர்களிடம் போனபோது அப்போது நடந்த பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அப்போதுதான் தனது தந்தையின் ஈனச் செயலை விவரித்துள்ளார் சிறுமி.

இதையடுத்து போலீஸாருக்குப் புகார் போய், போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனர். டிஎன்ஏ சோதனையில் சிறுமியை கர்ப்பமாக்கியது அவரது தந்தைதான் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் சிறுமிக்கு அபார்ஷன் செய்யப்பட்டது.  டிஎன்ஏ சோதனை முடிவுகளும், சிறுமியின் தாயார் கொடுத்த வாக்குமூலமும்தான் இந்த நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்க முக்கியக் காரணம்.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்