சென்னை: கமல்ஹாசன் - மணிரத்தினம் 2வது முறையாக இணையும் புதிய படத்திற்கு தக் லைப் என்று பெயர் வைத்துள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் டீசர் படு மிரட்டலாக உள்ளது.
கமல்ஹாசன் அதிரடியான கேங்ஸ்டராக படத்தில் வருகிறார்.. அதை விட முக்கியமாக அவரது அட்டகாசமான ஸ்டண்ட் சீக்வன்ஸ் கலக்கலாக வந்துள்ளது. இதுவே இப்படி என்றால் முழுப் படமும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நாயகன் படம்தான் கமல்ஹாசன் - மணிரத்தினம் கை கோர்த்த முதல் படம். இந்தப் படம் ஏகப்பட்ட விருதுகளையும், பாராட்டுக்களையும் அள்ளியது. இது தமிழில் ஒரு டிரெண்ட் செட்டர் படமும் கூட. நாயகன் படத்தைத் தழுவி அல்லது அதையொட்டித்தான் பெரும்பாலான கேங்ஸ்டர் படங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் பல காலத்திற்குப் பிறகு மீண்டும் மணிரத்தினத்துடன் கை கோர்த்துள்ளார் கமல்ஹாசன். இந்த முறையும் மிரட்டலான கதையில்தான் கமல்ஹாசன் நடிக்கப் போகிறார். இதை இன்று மாலை வெளியான டீசர் கம் பர்ஸ்ட் லுக் கம் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.

படத்திற்கு தக் லைப் என்று பெயரிட்டுள்ளனர். படத்தில் கமல் அட்டகாசமான வசம் பேசியுள்ளார்.. கேட்கவே கூஸ்பம்ப்ஸ் ஆகிறது..
"என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன். காயல்பட்டனத்துக்காரன்.. பொறக்கும்போதே எழுதி வச்சுட்டாவ.. சக்திவேல் நாயக்கன் கிரிமினல், குண்டா, யாக்கூஸா.. யாக்கூஸான்னா ஜப்பான் மொழில கேங்ஸ்டர்னு.. சொல்வாவ.. காலன் என்னைத் தேடி வந்தது இது முதல் முறையில்லை.. கடைசி முறையும் இல்லை.. என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. ஞாபகத்துல வச்சுக்கங்க" என்று பேசி முடிக்கும் அந்த வசனமே படம் குறித்த பிரமிப்பையும், பிரமாண்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

படம் முழுக்க கிராபிக்ஸுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும் போலத் தெரிகிறது.. கூடவே கமல்ஹாசனின் கனவு ஹீரோவான மருதநாயகத்தையும் நினைவூட்டுகிறது அவரது மீசை ஸ்டைலும், உருவத் தோற்றமும்.. ஒரு வேளை மருதநாயகத்துக்கான முன்னோட்ட படமாக கூட இது அமையலாம்.. யார் கண்டது!
கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றனர்.
மொத்த டைட்டில் வீடியோவும் பெரும் வைரலாகியுள்ளது.. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கமல்ஹாசனுக்கு சரியான பர்த்டே ட்ரீட்டைக் கொடுத்துள்ளார் மணிரத்தினம்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}