சென்னை: அட்டை பெட்டியில் வைத்து குழந்தையின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டுமொத்த மனங்களையும் சிதறடிக்கும் வகையிலான சம்பவம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்து அனைவரையும் பதறச் செய்தது. அந்த சம்பவத்திற்குக் காரணமான நபர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மசூத். இவரது மனைவி செளம்யா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். மிச்சாங் புயலின் போது அவருக்கு பிரசவ வழி ஏற்பட்டது. நாலாபக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தண்ணீர் அதிகளவில் சூழ்ந்திருந்த காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸுக்கு போன் போட்டும் லைன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டிலேயே குழந்தை பிறந்தது.
குழந்தையின் தொப்புள் கூட எடுக்கப்படாத நிலையில் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு செளம்யாவை அனுமதிக்க மறுத்துள்ளனர். பின்னர் போலீஸ் தலையீட்டின் பேரில் இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்து செளம்யாவுக்கு மட்டும் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளனர். பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தந்தை மசூத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.
அங்கு நடந்ததுதான் மிகப் பெரிய கொடுமை. இதுகுறித்து மசூத் கூறுகையில், எனது குழந்தை இறந்து விட்டது என்று கூறி அட்டைப் பெட்டியில் போட்டு மார்ச்சுவரியில் கொடுன்னு சென்னாங்க. நானும் கொண்டு போய் கொடுத்தேன். மறு நாள் ஆதார் கார்டு கொண்டு வரச் சொன்னாங்க. ஆதார்டு கார்டை கொடுத்துட்டு குழந்தையை அதே அட்டை பெட்டியில போட்டு தான் கொடுத்தாங்க என்றார். அவர் அட்டைப் பெட்டியைத் தாங்கியபடி வந்த காட்சி தமிழ்நாட்டையே அதிர வைத்து விட்டது.
இவ்வளவு அலட்சியமாக அரசு மருத்துவமனை, அதிலும் தலைநகர் சென்னையில் உள்ள மிகப் பிரபலமான கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நடக்கலாமா என்ற பெரும் விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு, குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் போட்டு வழங்கிய பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரம் வரை பன்னீர் செல்வம் பணி இடைநீக்கம் தொடரும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}