வீராங்கனைக்கு "இச் இச்".. பதவியை இழந்த கால்பந்து சங்கத் தலைவர்.. இது தேவையா!

Sep 11, 2023,02:56 PM IST
மாட்ரிட்:  வீராங்கனைக்கு முத்தம் கொடுத்த பிரச்சனையில் சிக்கிய ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

9வது மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 
ஸ்பெயின் அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியதை மைதானத்தில் கொண்டாடினர் அந்த நாட்டு அணியினர்.



அப்போதுதான் ஒரு பஞ்சாயத்து அரங்கேறியது. ஸ்பெயின் வீராங்கனைகளை ஸ்பெயின் நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்  கை குலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார். அப்போது வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசா அவர் அருகே வந்தபோது, அவரை இழுத்துக் கட்டியணைத்து அடுத்தடுத்து முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளதங்களில் வைரலாக பரவியது. 

இது பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. ஜெனீபருக்கு முத்தமிட்டது எல்லாம் தேவையில்லாத வேலை.. என்று கண்டனங்களும் எழுந்தன.  இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் லூயிஸ் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத வீராங்கனைகள், கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் பதவி விலகும் வரை விளையாட மாட்டோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் லூயிஸை 3 மாத காலத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் லூயிஸ்.

நமக்கு இது தேவையா பாஸ்??

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்