திருச்சி: அவரது தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர், பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு அவரை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரை பாரபத்தி பகுதியில் மிக பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கபட நாடகமாடும் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம். இப்போது ஆட்சியில் இருக்கின்ற வெற்று விளம்பர மாடல் ஆட்சி என்ன செய்கிறது என்று தெரியுமா?.
ரெய்டுன்னு ஒன்னு வந்துட்டா போதும். இதுவரை ஒரு முறை கூட போகாத கூட்டத்துக்கு கூட, அத காரணம் காட்டி டெல்லிக்கு போயி சீக்ரெட் மீட்டிங் நடத்துவார்கள். ஸ்டாலின் அங்கிள்... ஸ்டாலின் அங்கிள்... வாட்ஸ் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்...பாஜகவோடு உள்ளுக்குள்ள ஒரு உறவை வைத்துக்கொண்டு, வெளியே எதிர்க்கிற மாதிரி ஒரு டிராமா பண்ணிட்டு இருக்காங்க. எதிர்க்கட்சியாக இருந்தால் போங்க மோடி என்று பலூன் காட்டுவதும், இதே ஆளுங்கட்சியாக இருந்தால் வாங்க மோடி என்று குடைபிடித்து கும்பிடு போடுவார்கள்.
அங்கிள்.. அங்கிள்.. உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்துச்சுன்னா.. நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க அங்கிள்.. நீங்கள் நடத்துகிற ஆட்சியில் நேர்மை இருக்கா, நியாயம் இருக்கா, ஊழல் இல்லாமல் இருக்கா, சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கா, இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா.. சொல்லுங்க மை டியர் அங்கிள்.. என்று விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், இதற்கு திமுக அமைச்சர் கே என் நேரு திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜய்யின் தராதரம் அவ்வளவு தான். 40 ஆண்டு காலம் அரசியலில் இருப்பவரை அங்கிள் என விஜய் பேசியது தரம் தாழ்ந்த செயல். ஒரு மாநிலத்தோடு முதல்வர், பெரிய கட்சியோட தலைவரை, நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு, அவரை அப்படி சொல்லியிருப்பது அவரது தரம் தாழ்ந்த செயலாகத் தான் இருக்கும். இதற்கு மக்கள் 2026 தேர்தலில் பதில் சொல்வார்கள்.. நாங்களும் வரும் தேர்தலில் பதில் சொல்வோம். 10 பேர், 50 பேர் கூடிட்டாங்கன்னா ஒரு மாநில முதல்வரை எப்படி வேண்டும் என்றாலும் பேசலாம் என்பது எப்படி சரியாக இருக்கும்? என்று தெரிவித்துள்ளார்.
தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி ஏற்பார்கள்? : விஜய் குறித்து அண்ணாமலை கேள்வி!
கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம்... இது தான் இன்றைய சென்னையின் அடையாளம்: டாக்டர் அன்புமணி
பத்து மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜய்... அவரது தராதரம் அவ்வளவு தான்: கே.என்.நேருவின் பதில்!
Mr.Prime Minister என்று சொல்லும் அளவிற்கு விஜய் இன்னும் வளரவில்லை: நடிகர் சரத்குமார்
ஷ்ரேயாஸ் ஐயரை ஒரு நாள் டீமுக்கான கேப்டனாக்கப் போறோமா.. மறுக்கும் பிசிசிஐ
நிரம்பி வழியும் பவானிசாகர் அணை.. பார்க்கவே படு ஜோரா இருக்கு!
தங்கம் விலை நிலவரம்... நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}