கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமலேயே இருந்துள்ளார். அது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை விசாரித்ததில் பல திடுக்கிடும் சம்பவம்கள் வெளியாகியுள்ளது. அந்த மாணவியை அதே பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வந்தது. இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆகி கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உட்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இன்று பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து குற்றம் செய்த ஆசிரியருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்தப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சின்னச்சாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிடும்படி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
{{comments.comment}}