மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாக அமையும். பழைய நினைவுகளின் மூலம் ஒரு விதமான சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிதலும், ஒற்றுமையும் மேம்படும். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தவறிய சில பொருட்கள் பற்றிய எண்ணங்கள் மனதில் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் கூட விலகி செல்வார்கள். வீடு மாற்றும் முயற்சிகள் கைகூடிவரும்.
வியாபாரிகளுக்கு:
வியாபாரப் பணிகளில் சிறு சிறு தடைகளால் தாமதம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது படிப்படியான முன்னேற்றத்தினை தரும். கூட்டாளிகள் தக்க சமயத்தில் உதவியாக இருப்பார்கள். நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது வியாபார அபிவிருத்திக்கு நன்மையை தரும். புதிய நபர்களிடம் வியாபார ரகசியங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோகப் பணிகளில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நன்மதிப்பையும், ஆதரவையும் ஏற்படுத்தும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சலும், உடலில் ஒரு விதமான அசதிகளும் ஏற்பட்டு நீங்கும். மேலதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த ஊதிய உயர்வுகள் சாதகமாக அமையும். பணி நிமிர்த்தமான சில எண்ணங்கள் பூர்த்தியாகும்.
கலைஞர்களுக்கு:
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் தாமதப்பட்ட பணிகளை உரிய நேரத்தில் முடிக்க முடியும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சூழல் அமையும். ரசிகர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு:
அரசியல்வாதிகளுக்கு சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பாக்கிகள் வசூலாகும். மற்றவர்களின் கருத்துக்களை நம்பி வாக்குறுதி அளிப்பதை விட, பகுத்தறிந்து செயல்படுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு:
குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கணவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் அமையும். உறவுகளின் வழியில் மதிப்பு உயரும். பெற்றோர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதில் கவனம் வேண்டும். தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
மாணவர்களுக்கு:
கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை பிரச்சனை குறையும். பாடங்களில் இருந்துவந்த சந்தேகங்கள் குறையும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும்.
வழிபாடு:
குலதெய்வ வழிபாட்டை செய்துவர மனதில் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடிவரும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}