மனதில் இனம் புரியாத சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். நினைத்த பணிகளை செயல்படுத்தும் போது ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவும் பொழுது கவனம் வேண்டும்.
விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். செய்த முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். வர்த்தக வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் செயல்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. நிதானமான முயற்சிகள் காரிய அனுகூலங்களை உண்டாக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளும் இலக்குகளும் பிறக்கும்.
வியாபாரிகளுக்கு:
வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அலைச்சலுக்கு பின்னே நினைத்த காரியங்கள் கைகூடும். வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு ஜாமின் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும். பழைய பாக்கிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய கிளைகள் சார்ந்த பணிகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். மருத்துவத்துறையில் புதிய வாய்ப்புகள் அமையும். இரசாயனம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோகத்தில் இருந்த பதற்றங்கள் படிப்படியாக குறையும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாடு செல்வதற்கான சூழல் உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். சில முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். உணர்ச்சிவசமான பேச்சுக்களை தவிர்ப்பது நன்மதிப்பை உண்டாக்கும்.
கலைஞர்களுக்கு:
கலைத்துறையில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். புதிய மாற்றம் உண்டாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும்.
அரசியல்வாதிகளுக்கு:
முன் கோபம் இன்றி செயல்படவும். நண்பர்கள் இடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். தன்னம்பிக்கையுடன் செயல்படவும். கட்சி மேலிடத்தில் எதிர்பார்த்த ஆதரவுகள் சாதகமாகும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் கவனம் வேண்டும். வழக்குகளில் இருந்த அலைச்சல்கள் குறையும்.
பெண்களுக்கு:
குடும்ப விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமான சூழல் இருக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நன்று. அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி சாதகமாக அமையும். குழந்தைகள் இடத்தில் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைப்பட்ட சொந்த வேலைகளை முடிப்பீர்கள்.
மாணவர்களுக்கு:
கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். விவேகமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் சில மாற்றங்களை உண்டாக்கும். வெளியூர் சார்ந்த சில பயணங்கள் கைகூடும். அரசு உதவிகளில் தாமதம் ஏற்படும்.
வழிபாடு:
துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய செயல்களில் இருந்த தடை தாமதங்கள் விலகும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}