சென்னை: புதுமுகங்கள் நடிக்கும் வித்தியாசமான த்ரில்லர் படம் தான் குற்றம் புதிது. இப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.
"குற்றம் புதிது " படத்தை அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ் கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம்.

கதாநாயகனாக தருண் மற்றும் செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ரஜித், கிரிஷ் பாடல் வரி எழுத,ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் பி கிருபா இசையமைக்கிறார். கமலக்கண்ணன் படத் தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன், தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார். படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA நிறுவனம் ஏற்றுள்ளது.

அதிரடியாக உருவாகும் இந்த படம் “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. இப்படத்தை படக்குழுவினர் ஒரே கட்டமாக எடுத்து முடிக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}