சென்னை: நான் பாஜகவில் சேரவே இல்லை.. சேர்ந்தால்தானே விலகுவதற்கு என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த ஷோவை திறம்பட நடத்தி மிகவும் பிரபலமாக்கியவர். அது டிரண்ட்செட்டாகவும் மாறியது. அந்த ஷோவில் அவர் அடிக்கடி சொல்லும் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா மிக மிகப் பிரபலமான வார்த்தை.
திரைப்பட இயக்குநராகவும் இருந்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் முக்தார் அகமதுவுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே நான் அதிலிருந்து விலகி விட்டதாக கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், நான் பாஜகவில் ஒரு போதும் சேர்ந்தது இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி அதிலிருந்து வெளியேறுவேன்.. தவறான செய்திகளை பரப்புவது, தவறான தகவல்களைப் பரப்புவதே தற்போதைய இதழியல் போக்காக மாறியுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையின் விவாதம் சரியானதே. பத்திரிகையாளர்களிடையே ஒரு ஒழுங்கு உருவாகாத வரை அவர்கள் அடுத்தவர்களை கேள்வி கேட்க தகுதி இல்லாதவர்களாகி விடுகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
{{comments.comment}}