சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இவர்களுடன் விக்ராந்த், விஷ்ணு விஷால், விக்னேஷ், லிவிங்ஸ்டன்,செந்தில், ஜீவிதா, கே எஸ் ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு அதிரடியாக உருவான லால் சலாம் படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில் லால் சலாம் படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சிறப்பு தோற்றத்தில் நடித்த ரஜினியை காணவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையே ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திரகள் நடித்த ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}