- அஸ்வின்
சென்னை: சற்றுமுன் வெளியாகி உள்ள கோட் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ அனைவரையும் பெரும் சர்ப்பிரைஸில் ஆழ்த்தியுள்ளது.
இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே.. இப்படி ஒரு இனிமையான சர்ப்பிரைஸா என்று விஜய் ரசிகர்களோடு, யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களும் சேர்ந்து குஷியாகி விட்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் கோட் படத்தின் முதல் சிங்கிள் வேற லெவலில் பட்டையைக் கிளப்பியது. அது பார்ட்டி பாட்டு.. ஆனால் இப்போது வரப் போவது பேமிலி பாட்டு.. முதல் பாட்டை எழுதியவர் கார்த்தி வைரமுத்து.. 2வது பாட்டை எழுதியிருப்பவர் கபிலன் வைரமுத்து.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு புதிய கீதை படத்தில் இணைந்த விஜய் - யுவன் கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களை எகிற வைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு பாடலை பாடியுள்ளார். முதல் பாடல் விசில் போடு மிகப்பெரிய சென்சேஷனாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2வது சிங்கிள், விஜய் பிறந்த நாளான நாளை வெளியாகவுள்ளது. அதன் புரமோவை இன்று மாலை வெளியிட்டனர்.
இது பல சர்ப்பிரைஸ்களை அள்ளித் தெளித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணியுடன் இணைந்து இப்பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதுதான் மிகப் பெரிய சர்ப்பிரைஸ். பவதாரணியின் கடைசி திரைப்பாடலாக இது இருக்கும் என்று தெரிகிறது. பாடலின் சில வரிகள்தான் இந்த புரோமோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் பவதாரணியின் அந்தக் குரலைக் கேட்டதுமே கண்களில் நீர் துளிர்த்து விடுகிறது. அப்படி ஒரு உருக்கம்.
அதை விட பெரிய மகிழ்ச்சி விஜய்யின் அந்த தாலாட்டு வரிகள்.. பாடலில் விஜய் புகுந்து விளையாடியிருப்பார் என்று அந்த சில வரிகளே எடுத்துரைக்கிறது. விஜய் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து பின்னணி பாடியுள்ளது இதுவே முதல் முறையாகும். விஜய்க்காக இளையராஜா பாடியுள்ளார்.. இளையராஜா இசையில் விஜய் பாடியுள்ளார். யுவன் இசையிலும் விஜய் பாடியுள்ளார்.. ஆனால் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த, அதிலும் மறைந்த பவதாரணியுடன் இணைந்து அவர் பாடியுள்ள இந்தப் பாடல் வேற லெவல் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
முழுப் பாடலையும் கேட்க இப்போதே ரசிகர்கள் பரவசமாக காத்திருக்கிறார்கள்.. பார்ட்டி டூ பேமிலியா என்றும் வெங்கட் பிரபுவை கேட்டு கலாய்த்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.. புரோமோ இப்படி வெறித்தனமாக இருந்தால்.. முழுப் பாடல் வேற ரகமாக இருக்கும் இது நிச்சயம் பிரமாண்ட சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகிறார்கள்.
அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!
TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!
அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்
அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
{{comments.comment}}