சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் கையில் மை வைத்து, வாக்குகளை செலுத்தி தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக லோக்சபா தேர்தலுக்காக அனைவரும் காத்திருந்த எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகிவிட்டது. நடிகர்கள் நடிகைகள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என காலை முதலிலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் ஆளாக அஜீத்தான் வாக்களித்தார். வாக்குச் சாவடியை திறப்பதற்கு முன்பாகவே வந்து விட்டார் அஜீத். காத்திருந்து தனது வாக்கை செலுத்தி விட்டு கிளம்பிச் சென்றார். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமலஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் வளசரவாக்கம் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் கருணாகரன் திருவான்மியூரில் தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, நடிகரும், எம்பியுமான விஜய் வசந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்கள் வாக்கினை செலுத்தினார்கள். நடிகை குஷ்பூ சுந்தர் சி தனது மகள்களுடன் எனது வாக்கினை செலுத்தினார்.
நடிகை திரிஷாவும் தனது வாக்கை இன்று செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார். விஜய் சேதுபதி, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் வெற்றி மாறன், யோகிபாபு, விந்தியா, இயக்குநர் அமீர், உறியடி விஜயக்குமார், இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஆர்வி உதயக்குமார், நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா, நடிகை அதிதி பாலன், இயக்குநர் லிங்குசாமி என திரையுலகினர் பெரும் திரளாக வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இசைஞானி இளையராஜாவும் இன்று வரிசையில் நின்று வாக்களித்து விட்டுச் சென்றார். நடிகை வரலட்சுமி சரத்குமாரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}