- தெ.நாராயண லெட்சுமி, B.E
மத்திய கிழக்கு பகுதியில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் தொடர்ந்து நிலையை கண்காணித்து வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் முழு விழிப்புடன் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பல நாடுகளில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் தொடர்ந்து அழைப்புகள் மற்றும் செய்திகளின் மூலம் இங்கு உள்ளவர்களின் நலத்தை பற்றி கேட்டறிந்து வருவது மனதை தொடும் விஷயமாக உள்ளது. எங்களை நினைத்து கவலைப்பட்டு பிரார்த்தனை செய்கிற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம், அனைவரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பி செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றி அமைதியாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டியது இந்த நேரத்தில் மிக முக்கியமானதாகும்.

அன்பானவர்களே, தூய்மையான மற்றும் உயர்ந்த மனநிலையுடன் நாம் அனைவரும் ஒரு எண்ணத்தை உலகத்திற்கு பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது. உலக நாடுகளின் பொறுப்பான தலைவர்கள் வாழ்க்கையின் உண்மையான மதிப்பை உணர்ந்து, மனிதகுலத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் அறிவும் விழிப்புணர்வும் பெற வேண்டும்.
உலகெங்கும் மனிதர்கள் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். நன்மையும் வளமும் நிறைந்த வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
lifeல சில பிரச்சனை வரும்
இத கடக்கவே முடியாது போல… இப்போ என்ன ஆகுமோன்னு மனசு நொந்து போயி இருக்கும்
ஆனா நாள் போகப் போக
அந்த கஷ்டத்தையும் manage பண்ணி கடந்து வந்து இருப்போம்
அதே போல இப்போவும் இருக்கு,
அதையும் face பண்ணிட்டு தான் இருக்கோம்.
இப்போ வந்ததும் கடந்து போயிடும்…
இனிமேலும் வர்றதையும் நாம கடந்து போவோம்ன்னு ஒரு confidence.
There were days when I thought I would never be able to get through it.
But I crossed it…
I am crossing it…
And I will cross it…
Be Confident Always
போர் இல்லாத உலகத்தை உருவாக்குவோம்.
வாழ்க வையகம்.
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}