வாழ்வில் கடந்து சென்ற கசப்பான சம்பவங்களை மறக்க முடியவில்லையா..!! சதைக்குள் சிக்கிக்கொண்ட கண்ணாடி சில்லாக மனதை நெருடுகிறதா..!! அதை வெளியேற்ற முடியாதது போல் தோன்றினாலும் சாத்தியம் தான்..
எல்லோர் வாழ்விலும் இருண்ட காலங்கள் இருக்க தான் செய்கிறது.. ஆனால் அவற்றால்தான் வெளிச்சம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று நம்மால் உணரமுடிகிறது.. என்னதான் அந்த கடின நாட்களை கடந்து வந்து இருந்தாலும், அவை தந்த காயங்களும் அதன் வடுவும் நம்முடன் தான் பயணிக்கும்..
.jpg)
வடுக்களை மறைய வைக்க முடியாது.. ஆனால் காயங்களுக்கு ஏற்ற மருந்து இட்டு விரைவில் மனதளவில் குணமாக்குவது வரும் நாட்களுக்கு மிக அவசியமாகும்.. தேவையற்ற நினைவுகளை தேர்வு செய்து அதை நினைவில் இருந்து அழிக்க நாம் மூளையும் மனதும் மென்பொருள் கொண்டது அல்ல.. அது நினைவுகளும், உணர்ச்சிகளும், உயிரும் கொண்ட அரிய கூடு..வடுவாகி போன கருப்பு பக்கங்களை நினைவு புத்தகத்தில் இருந்து தேடி எடுங்கள்...
ரணம் தந்த நினைவுகள் வலி கலந்தவையாக தான் இருக்கும்.. ஆனால் கடைசியாக ஒரு முறை என்று வலி தங்கி கொண்டு நினைவில் ஊடுருவி, காட்சிகளை வரிசை படுத்துங்கள்.. ஒவ்வொரு தருணமும் இன்று நடந்தது போல எண்ணி கவலை கொள்ளுங்கள்..பிறகு அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று அறிந்து, பெருமிதம் கொள்ளுங்கள்.. அந்த இருளை கடந்து விட்டதை உங்கள் மனதில் ஆழமாக பதியும் படி உணருங்கள்... அதை தொடர்ந்து உங்கள் வாழ்வில்இருள் இல்லா நாட்களை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுங்கள்.. வாழ்வின் அழகான மகிழ்ச்சியான நாட்களின் சந்தோசத்தை நினைத்து வானவில் காணுங்கள்..
அதோடு வலிகள் இல்லா வடுக்களுடன், வருங்காலம் தரும் இன்ப துன்பங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் மன பக்குவம் கொண்டு, நம்பிக்கையான மனநிலையுடன் முன்னேறுங்கள் வாழ்வில்...!
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
{{comments.comment}}