இப்பெல்லாம் மக்கள் லேசான காய்ச்சல் தலைவலி சளி என்றாலே உடனே மருத்துவரை நோக்கி படை எடுக்க துவங்கி விடுவது வழக்கமாகிவிட்டது. அதிலும் எதற்கெடுத்தாலும் மாத்திரை உட்கொள்வது சகஜமாகி விட்டது. இப்படி நாம் நாளுக்கு நாள் செயற்கையை நோக்கி சென்று கொண்டே இருக்கிறோம். இயற்கையை நேசிக்க மறந்து விட்டோம். இதனால் பல உபாதைகளை தேவையில்லாமல் விலைக்கு வாங்கி வருகிறோம்.
இயற்கையும் மனித உடலும் ஒன்றுதான். நாம் தான் இயற்கையை பாழாக்கி விட்டு வருகிறோம். ஏனெனில் இயற்கை நமக்கு அளிக்கும் அற்புதமான வளங்களும் கொடைகளும் நம் உடலுக்கு ஒருபோதும் தீங்கு செய்யாது. அது நன்மையே செய்யும். நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இயற்கையிடமிருந்து தான் கிடைக்கின்றன. குறிப்பாக சூரிய கதிர்களில் இருந்து நமக்கு விட்டமின் டி கிடைக்கிறது. மண்ணில் இருந்து இயற்கையான காய்களும் பழங்களும் கிடைக்கின்றன. அதேபோல் காற்றை சுவாசித்து தான் நாம் உயிர் வாழ்கிறோம். தினசரி 70 சதவிகித ஆக்சிஜனை சுவாசிக்கிறோம்.

இப்படி இயற்கையும் மனிதரும் ஒத்துப்போன ஒன்றை இன்று நாம் பிரித்து விட்டு வருகிறோம். நம்மை நாமே அழித்துவிட்டு வருகிறோம். இந்த நிலை என்று மாற வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் இயற்கையை நேசித்தும, இயற்கை நமக்கு கொடுக்கும் வளங்களின் அற்புதங்களை உணர்ந்தால் மட்டும்தான் உண்டு.
சரி இப்ப நாம விஷயத்துக்கு வருவோம். முதலில் நமக்கு லேசான காய்ச்சல் தலைவலி சளி என்றால் உடனே சென்று மருத்துவரை அணுகாமல் இயற்கை நமக்கு கொடுத்த வளங்களை பயன்படுத்தி அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பது குறித்து இயற்கை வாழ்வியல் அரசு மருத்துவர் எம்.ஆக்னஸ் அனாமிகா நமக்கு அற்புதமான தகவல்களை வழங்கி உள்ளார். அவர் சொல்வது இதுதான்:
காய்ச்சல் சளி இருமல் தலைவலி போன்ற தொந்தரவுகளை நீக்க நோய் எதிர்ப்பு சக்தி குடிநீர் பருக வேண்டும். அப்படி பருகி வரும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலைத் தாக்கும் நோய்களுக்கு எதிராக அது போராடி நம்மைக் காக்கும்.
சரி நோய் எதிர்ப்பு சக்தி குடிநீர் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்:
விரலி மஞ்சள்
அதிமதுரம்
சுக்கு
மிளகு
துளசி
மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் சமபங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் விரலி மஞ்சள் மட்டும் தேவையான அளவு எடுத்துக் கொண்டு வெயிலில் நன்றாக உலர்த்தி பவுடர் செய்து கொள்ள வேண்டும். பின்னர் வாரத்திற்கு இருமுறை ஒரு நபருக்கு இந்தப் பவுடரில் இருந்து கால் டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் 100 ml தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் 100ml தண்ணீர் 50 ml வரும் வரை வற்றவிட்டு இந்த கசாயத்தை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், போன்ற தொந்தரவுகள் ஏற்படாது என மருத்துவர் ஆக்னஸ் அனாமிகா கூறியுள்ளார்.
செஞ்சு பார்த்துப் பருகி வாருங்கள்.. எப்படி இருந்துச்சுன்னு எங்களுக்கும் சொல்லுங்க.. மறக்காமல் எல்லோருக்கும் சொல்லுங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?
தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}