மின்னல் தாக்கி 10 பேர் பலி.. ஒடிஷாவில்

Sep 03, 2023,09:50 AM IST
புவனேஷ்வர்: ஒடிஷா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிஷாவில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.  இதில் குர்தா மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இடி மின்னல் தாக்கி பலியானார்கள். இதேபோல போலாங்கீர் மாவட்டத்தில் 2 பேரும், அங்குல், போத், தென்கனால், ஜெகதீஷ்சிங் பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி பலியானார்கள்.



குர்தா மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கி 3 பேர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிஷாவில் மின்னல் தாக்கி பத்து பேர் பலியானதைத் தொடர்ந்து, மழைக்காலங்களில் குறிப்பாக இடியுடன் கன மழை பெய்யும்போது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லக் கூடாது. மின்சாரக் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் கீழே ஒதுங்கக் கூடாது. பாழடைந்த, சேதமடைந்த கட்டடங்களில் தஞ்சம் அடையக் கூடாது என்று பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்