விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் மார்ச் 4 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியாளர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக மார்ச் 15ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். அதிலும் இங்கு நடைபெறும் மாசி பெருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த மாசி பெருவிழாவில் தேரோட்டம், மாயன
கொள்ளை நிகழ்வு, தீமிதி திருவிழா ஆகியன முக்கிய விழாவாக கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசி பெருவிழா நாளை மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, 27ஆம் தேதி ஆண் பூத வாகனத்திலும், 28ஆம் தேதி பெண் பூத வாகனத்திலும், மார்ச் ஒன்றாம் தேதி சிம்ம வாகனத்திலும், மார்ச் இரண்டாம் தேதி அன்ன வாகனத்திலும், மார்ச் மூன்றாம் தேதி யானை வாகனத்திலும் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மாசி தேரோட்டம் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
முன்னதாக அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். பின்னர் மேளதாளம் முழங்க அம்பாள் கோவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனை காண லட்சக்கணக்கான மக்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு வடம் இழுத்து சாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மார்ச் 4ஆம் தேதிக்கு பதிலாக, மார்ச் 15ஆம் தேதி வேலை நாட்களாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டத்தின் போது கூட்டம் நெரிசலால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படக்கூடும் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}