ஒரே நாளில் பிரதமர் மோடி - ராகுல் காந்தி பிரச்சாரம்... பரபரப்பான கேரளா

Apr 15, 2024,01:31 PM IST

திருவனந்தபுரம் :  பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று (ஏப்ரல் 15) ஒரே நாளில் கேரளாவில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க உள்ளதால் கேரள மாநிலமே பரப்பாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் கட்அவுட்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.


கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் இது வரை பாஜக.,வில் லோக்சபா உறுப்பினர்கள் யாரும் கிடையாது. அதனால் இந்த முறை எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது. நாடு முழுவதும் பாஜக.,வா? இந்தியா கூட்டணியா? என அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு பிரச்சாரங்கள் அனல் பறக்க துவங்கி உள்ளது. பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் காங்கிரஸ் பற்றியும், ராகுல் காந்தி தான் செல்லும் இடங்களில் பிரதமர் மோடி பற்றியும் நேரடியாக தாக்கி விமர்சனம் செய்து பேசி வருகின்றனர்.




இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருவரும் கேரளாவில் பல பகுதிகளில் நடக்கும் பிரச்சார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். ராகுல் காந்தி இந்த முறையும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் தான் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதியில் இன்று இருவரின் பிரச்சாரமும் எப்படி இருக்க போகிறது என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


வயநாடு தொகுதியில் வழக்கம் போல ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ராகுல் காந்தி வாகனப் பேரணி நடத்தினார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போதும் இதே போல அவர் வாகன பேரணி நடத்திய போது ஆயிரக்கணக்கானோர் புடை சூழ அவர் வந்தது நினைவு இருக்கலாம். இன்றும் கூட அவர் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகன பேரணி நடத்தி வயநாடு தொகுதியை மட்டுமல்லாமல் , கேரள மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். 



பிரதமர் மோடியும் இன்று கேரளாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அட்டிங்கல் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார்.  கேரளாவின் குன்னமங்கலம் பகுதியில் தன்னுடைய பிரச்சார பயணத்தை துவங்கும் மோடி, திருச்சூர் மாவட்டம் அலந்தூர் தொகுதியில் நிறைவு செய்ய உள்ளார். தொடர்ந்து அலந்தூர், திருச்சூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் சரசு மற்றும் சுரேஷ் கோபியை ஆதரித்தும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கு பிறகு கட்டக்காடு பகுதியில் முரளீதரன் மற்றும் ராஜீவ் சந்திரசேகரை ஆதரித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து திருநெல்வேலி வரும்  பிரதமர் மோடி, மாலை 4 மணிக்கு நெல்லையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அந்த தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். 


மற்றொரு புறம் ராகுல் காந்தி, வடக்கு கோழிக்கோடு மாவட்டத்தில் இன்று மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் வயநாடு தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். வயநாட்டில் இன்று பிரம்மாண்ட பிரச்சாரம் நடத்த உள்ளார். கேரளாவில் தனது பிரச்சாரம் முடித்த பிறகு, அங்கிருந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் ராகுல் காந்தி, தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து ஓட்டு சேகரிக்க உள்ளார். ஏப்ரல் 18 ம் தேதி கன்னூர், பாலக்காடு, கோட்டயம் தொகுதிகளில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏப்ரல் 22ம் தேதி திரிச்சூர், திருவனந்தபுரம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்