சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தலைவர் 171. லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படம் இது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது.
தற்போது ரஜினிகாந்த் வேட்டையன் படபிடிப்பை கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்ட நிலையில் அடுத்து தலைவர் 171 படத்திற்கு வர உள்ளார். இதையடுத்து தற்போது இது தொடர்பான செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. முதற்கட்டமாக படத்தின் டைட்டில் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
பார்க்கவே மிரட்டலாக இருக்கிறது ரஜினியின் லுக். ரெட்ரோகெட்டபில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது வழக்கமான ஸ்டைல் மேனெரிசத்துடன் கூடிய ஸ்டில் ஆக இது அமைந்திருக்கிறது. இந்த லுக் ரசிகர்களை இது பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி பெரிய தங்க நிற வாட்ச்சையே கை விலங்காக மாற்றியிருக்கிறார்கள். இது ரோலக்ஸ் வாட்ச் என்று டீகோட் செய்யும் ரசிர்கள், அனேமாக இவர்தான் விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸின் அப்பாவாக இருக்கும என்றும் மிரள வைத்து வருகிறார்கள்.
கண்ணில் கூலருடன் ஸ்டைலான ஹேர் ஸ்டைல் உடன் சூப்பர் ஸ்டார் இதில் காட்சி தருகிறார். இந்தப் படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இப்போதே அது ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்களுக்கான விருந்தாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட பேட்ட படம் எப்படி ரஜினி ரசிகர்களை துள்ள வைத்ததோ அந்த அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பையும் இது கூட்டி உள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}