சென்னை: லோக்சபா தேர்தல் 2024க்கான முன்னேற்பாடுகளில் திமுக களம் இறங்கியுள்ளது. முக்கியமான 3 குழுக்களை அறிவித்து தனது தேர்தல் பணிகளுக்கு அது "பெரியார் சுழி" போட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாக தொடங்கியுள்ளன. தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளுடன் ஒரு பக்கம் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களைத் தொடங்கியுள்ளது. பாஜக தனது தரப்பு முஸ்தீபுகளையும் தொடங்கி வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் தொடர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று தேர்தல் பணிக்குழு ஒன்று அறிவிக்கப்பட்டது. இப்போது திமுகவும் தனது தரப்பிலிருந்து 3 முக்கியக் குழுக்களை அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளை இதன் மூலம் திமுகவும் முழு வீச்சில் தொடங்கி விட்டது.

திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் எப்போதுமே திமுகவுக்கு துருப்புச் சீட்டாக இருப்பது தேர்தல் அறிக்கைதான். தற்போது தேசிய அளவில் திமுக மிக முக்கியக் கட்சியாக இருப்பதால் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையையும் அட்டகாசமாக தயாரிக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் மிகப் பெரிய டீமை இதற்காக களம் இறக்கியுள்ளது.
நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த திமுகவின் வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே நிலவி வரும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை பெரிதாகவே அறிவித்துள்ளது திமுக மேலிடம்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு விவரம்:

கனிமொழி கருணாநிதி
டிகேஎஸ் இளங்கோவன்
ஏகேஎஸ் விஜயன்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
டிஆர்பி ராஜா
கோவி செழியன்
கேஆர்என் ராஜேஷ்குமார்
சிவிஎம்பி எழிலரசன்
எம்எம் அப்துல்லா
எழிலன் நாகநாதன்
மேயர் பிரியா
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு:

அதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு தலைமையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு, இடப் பங்கீடு தொடர்பான முக்கியமான விஷயங்களை இந்தக் குழு கவனிக்கும். டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் இடம் பெற்றிருப்போர் விவரம்:
டி.ஆர்.பாலு
கே.என். நேரு
இ. பெரியசாமி
க.பொன்முடி
ஆ.ராசா
எம்ஆர்கே பன்னீர் செல்வம்
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு:

அடுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் முக்கியக் கட்சிகளாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில் புதிதாக ஏதேனும் கட்சிகள் சேருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}