சசிகாந்த் செந்திலுக்கு லோக்சபா சீட்.. செம வியூகம் வகுத்த காங்கிரஸ்.. சூப்பர் ஸ்கெட்ச்!

Mar 24, 2024,05:01 PM IST

சென்னை: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட வார் ரூமின் தலைவராக செயல்பட்ட சசிகாந்த் செந்திலை தமிழ்நாட்டு லோக்சபா தேர்தலில் களம் இறக்கி சர்பிரைஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ்.


வழக்கமாக பழம் பெரும் தலைவர்களுக்கே சீட் கொடுப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அதில் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்தார். புது ரத்தம் மற்றும் இளையவர்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகளை அவர் கொடுத்தார். இது பல பழைய காலத்துத் தலைவர்களுக்குப் பிடிக்காமல் போனதால்தான், வரிசையாக ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொல்லி வெளியேறினர். 




ஆனாலும் இதை ராகுல் காந்தி பெரிதுபடுத்தவில்லை. மாற்றம் வரும்போது இப்படித்தான் எதிர்ப்பும் கூடவே வரும் என்பதால் இந்த மாற்றங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. தமிழ்நாட்டிலும் கடந்த லோக்சபா தேர்தலில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாகூர் என பலர் அறிமுகமானார்கள். இவர்களின் செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தன, கவனம் ஈர்த்தன.


இந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு படி மேலே போய், அறிவார்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆரம்பித்து அசத்தியுள்ளது காங்கிரஸ். தமிழ்நாட்டில் இந்த முறையும் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ். அதில், ஏழு வேட்பாளர்களின் பெயரை அறிவித்துள்ளது. இதில் பெரிய அளவிலான ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒரே சர்ப்ரைஸ் என்னவென்று பார்த்தால், திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளர்தான்.  கடந்த முறை இங்கு ஜெயக்குமார் போட்டியிட்டு வென்றிருந்தார். தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளிலும் புதுவையிலும் போட்டியிடுகிறது. இதில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தனர். நேற்று இரவு ஏழு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.


அதன்படி கரூரில் மீண்டும் ஜோதிமணி போட்டியிடுகிறார். விருதுநகரில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களத்தில் நிற்கிறார். கன்னியாகுமரி எம்பியாக உள்ள விஜய் வசந்த் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளராக செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். கடலூர் தொகுதியில் எம் கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டவராவார். தற்போது இந்தத் தொகுதியில் திமுகவே போட்டியிடுகிறது.  கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் களம் காண்கிறார்.


ஏழு வேட்பாளர்களில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்கள் மட்டுமே புதியவர்கள். மற்ற அனைவருக்கும் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த பெயர்களும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்