சென்னை: நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 39 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினோடு, சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில் 10.92 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கிறார்கள். வாக்களிப்பதற்கு வசதியாக 81,157 கட்டு்பபாட்டு இயந்திரங்களும், 86,858 விவிபாட் இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 76 பேர் பெண்கள் ஆவர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலும் இன்றே நடைபெறுகிறது.

சென்னையில் முதல் ஆளாக வாக்களிக்க வந்தார் நடிகர் அஜீத். அஜீத் குமார் திருவான்மியூரில் வசித்து வருகிறார். அவர் பாரதிதாசன் நகரில்உ ள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் வழக்கமாக வாக்களிப்பார். எப்போதும் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிப்பது வழக்கம். ஆனால் அவரைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டு விடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் அரை மணி நேரத்திற்கு முன்பே வந்து விட்டார் அஜீத்.
முதல் ஆளாக வாக்களித்த விஐபிக்கள்

ஆறரை மணி அளவில் வந்த அஜீத், பொறுமையாக வாக்குச் சாவடிக்கள் அமர்ந்து காத்திருந்தார். அதன் பின்னர் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் ஆளாக தனது வாக்கைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று காலை முதல் ஆளாக வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். அவர் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார். திண்டிவனத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், தர்மபுரி பாமக வேட்பாளருமான சவுமியா அன்புமணி வாக்களித்தார்.

சென்னையில் வாக்களித்த தமிழிசை, ராதிகா, தமிழச்சி தங்கப்பாண்டியன்
சென்னை சாலிகிராமத்தில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், திருச்சி தில்லைநகரில் அமைச்சர் கே.என். நேரு, திருத்துறைப்பூண்டி வேளூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வாக்களித்தனர்.
பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் சென்னை திருவான்மியூரில் வாக்களித்தார். நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு, தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நீலாங்கரையில் வாக்களித்தனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}