சென்னை: சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக 10,214 சிறப்புப் பேருந்துகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்து வருகிறது.
ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நாளில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. அதன் பிறகு 18ம் தேதி ஓய்வு நாளாகும். 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன்4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
இந்த நிலையில் சென்னையில் வசிக்கும், அதேசமயம், ஓட்டுகளை சொந்த ஊரில் வைத்துள்ள லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு பயணப்பட ஆரம்பித்துள்ளனர். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் போக முயன்ற பலர் பஸ்கள் சரிவரக் கிடைக்காமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள் என்பது நினைவிருக்கலாம். அந்த சிரமம் இந்த முறை வந்து விடக் கூடாது, ஓட்டு போடாமல் மிஸ் ஆகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் பலர் இப்போதே சொந்த ஊர்களுக்குக் கிளம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகமும் சிறப்புப் பேருந்துகளை இயக்கி மக்களுக்கு சவுகரியமான முறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல்:
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 2970 சிறப்பு பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7154 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3060 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தினசரி இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 1825 சிறப்பு பேருந்துகளும் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2295 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 8034 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}