அடுத்த சபாநாயகர் யார்?.. கோட்டா நாயகன் ஓம் பிர்லா Vs மாவேலிக்கரை கொடிக்குன்னில் சுரேஷ்!

Jun 25, 2024,06:22 PM IST

டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் வந்து விட்டது. ஒரு மனதாக தேர்வு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.


லோக்சபா சபாநாயகர் பதவிக்கு இதுவரை தேர்தல் நடந்ததில்லை. இதற்கு முன்பு இருந்த சபாநாயகர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது.


கோட்டாவிலிருந்து கொடி நாட்டிய ஓம் பிர்லா




பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா, கடந்த லோக்சபாவில் சபாநாயகரா பதவி வகித்தவர் ஆவார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர். 2003ம் ஆண்டு கோட்டா தெற்கு சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஓம் பிர்லா, 2008 தேர்தலிலும் இதே தொகுதியில் வென்றார். அதன் பின்னர் எம்.பி தேர்தலுக்கு மாறி விட்டார் ஓம் பிர்லா. 


2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் கோட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஓம் பிர்லா. 2014 தேர்தலில் வென்ற பிறகு அவர் நிலைக்குழு உறுப்பினராக பதவி வகித்தார். 2019 தேர்தலில் வென்ற பிறகு அவர் லோக்சபா சபாநாயகர் ஆனார். இவர் சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜகவினர் பலரே கூட எதிர்பார்க்கவில்லை. சர்ப்பிரைஸ் சாய்ஸ்தான் ஓம் பிர்லா.


மார்வாரி சமூகத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சாதாரண மாவட்டத் தலைவர் பதவி முதல் லோக்சபா சபாநாயகர் பதவி வரை அவர் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் சபாநாயகராக இருந்த யாருமே அடுத்த முறை நடந்த  தேர்தலில் வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றி மீண்டும் எம்.பியாக வெற்றி பெற்று சாதனை படைத்தவர் ஓம் பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது.


29 வருட கால எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ்




கேரள மாநிலம் கொடிக்குன்னில் என்ற ஊரில் பிறந்தவரான சுரேஷ், மூத்த காங்கிரஸ் எம்.பி. ஆவார். 62 வயதாகும் இவர் வழக்கறிஞர் ஆவார்.  கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக செயல்பட்டு வருகிறார். மத்திய அமைச்சராக முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் பதவி வகித்துள்ளார். 8வது முறையாக இவர் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.  


முதல் முறையாக 1989ம் ஆண்டு அடூர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் தொடர்ந்து 1991, 1996, 1999 ஆகிய தேர்தல்களிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1998 மற்றும் 2004 தேர்தல்களில் இவர் தோல்வி அடைந்தார்.  


2009 தேர்தலில் மாவேலிக்கரை தொகுதியில் போட்டியிட்டு லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014, 2019, 2024 தேர்தல்களிலும் இதே மாவேலிக்கரை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தற்போதைய லோக்சபாவில் அதிக முறை எம்.பியாக பதவி வகித்த எம்.பி என்ற  சாதனையுடன் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 29 வருடங்கள் அவர் எம்.பியாக பணியாற்றியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்