அன்புள்ள மான்விழியே.. கடிதம் வாயிலாக காதலைத் தீட்டிய தமிழ்த் திரைப் பாடல்கள்!

Jun 20, 2025,10:42 AM IST

- தென்றல்


இலக்கியங்களில், தலைவன் தலைவி இடையே தோழி மட்டுமல்ல அன்னம், புறா, கிளி, குயில், மான், வண்டு, நாரை ஏன் காற்று, முகில் எல்லாம் காதல் தூது போயின. தபால் துறை வந்ததும் காதலைச் சுமந்து கொண்டு கடிதங்கள் அங்கும் இங்கும் பறந்தன. 


போர்க்கடவுளாக மிருகத்தனமாய் உயிர்களைக் கொன்று குவித்து இரத்தக்களரியாய்த் தன் வரலாற்றின் பக்கங்களை எழுதிக்கொண்ட பிரெஞ்ச் மன்னன் நெப்போலியன் போனபார்ட் கூட உருகி உருகி தன் மனைவி ஜோசபினுக்குக் காதல் கடிதம் எழுதித்தான் இருக்கிறார். 


கல்நெஞ்சனோ காட்டானோ யாராய் இருப்பினும் காதல் வந்ததும், கவித்துவமாய் வரிந்து வரிந்து கடிதம் எழுதிப் பரிமாறிக்கொண்ட காலம் இருந்தது. இன்றைய தொழில்நுட்பம் கபளீகரம் செய்துவிட்ட சின்ன சின்ன மகிழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.


கண்ணதாசன் அவர்கள் எழுதிய காலத்தால் கரைக்க முடியாத கடிதப் பாடல் ஒன்று உண்டு. 




"அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம்! 

நான் எழுதுவதென்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை! 

அன்புள்ள மன்னவனே, ஆசையில் ஓர் கடிதம்! 

அதைக் கைகளில் எழுதவில்லை, இரு கண்களில் எழுதி வந்தேன்!"


பாட்டில் நடிகை ஜமுனாவின் கண்ணசைவைப் பார்த்தால் கண்களில் தான் எழுதி இருக்கிறார் என்று சத்தியமே செய்வீர்கள். 


வாலி அவர்கள் எழுதிய கடிதப் பாடல் ஒன்று உண்டு. நடுநடுவல மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு எழுதப்பட்ட பாடல். 


"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே! 

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?நான் இங்கு சௌக்கியமே! "


Video: காதல் கடிதங்களை பாடல்களில் தூது விட்ட திரைப்பாடல்கள்


இந்த வரிகளை அப்படியே மாற்றி போட்ட கடிதப் பாடல் நினைவுக்கு வருகிறதா? 


"நலம், நலமறிய ஆவல்! உன் நலம், நலமறிய ஆவல்! 

நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா?"

 

என்ற வரிகள் அவை. வைரமுத்து அவர்கள் எழுதிய கடிதப் பாடல் தெரியுமா? 


"காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்! 

வானின் நீலம் கொண்டு வா, பேனா மையோ தீர்ந்திடும்!

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு, பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்!"

 

பெண் பாடுகிறாள்:


"கடிதத்தின் வார்த்தைகளில்

கண்ணா நான் வாழுகிறேன்! 

பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ! "


ஆண் சொல்கிறான்: 


"பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்! 

விரல்பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ!"


மென்மையான காதலை மயிலிறகால் வருடும் வரிகள்.. மீண்டும் பகிரலாம்!


(தென்றல் தொடர்ந்து வீசும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!

news

Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?

news

தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்