Lunch Box Recipe: லஞ்ச்சுக்கு சூப்பர் சைட் டிஷ்.. துவரம் பருப்பு தேங்காய் துவையல்.. செம டேஸ்ட்டு!

Nov 05, 2024,02:25 PM IST

-ஸ்வர்ணலட்சுமி


சென்னை: திரும்ம்பத் திரும்ப அதே காய்தானா எப்பப் பார்த்தாலும் சாப்பாட்டுக்கு என்று வீட்டில் அலுத்துக் கொள்கிறார்களா.. டோன்ட் ஒர்ரி சிஸ்ஸிஸ்..  இருக்கவே இருக்கே  சூப்பரான வகை வகையான துவையல்கள்.

இன்னிக்கு ஒரு துவையலைப் பார்ப்போம்.. அதை செஞ்சு சாப்பாட்டுக்கு கொடுத்து அனுப்புங்க.. ஒரு பருக்கை சோறு கூட மிச்சம் வைக்காம சாப்பிட்டுட்டு வர்றாங்களா இல்லையான்னு பாருங்க. இது பிகினர்ஸ் மற்றும் பேச்சலர்ஸ்குக்கும் ரொம்பவே கை கொடுக்கக் கூடிய டிஷ்.

அப்படி என்ன டிஷ்னுதானே கேக்கறீங்க.. அதுதாங்க துவரம் பருப்பு தேங்காய் துவையல்.. செஞ்சு பார்க்கலாமா.. வாங்க கிச்சனுக்குள்ள போலாம்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1/2 கப்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
வர மிளகாய் - 3/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
புளி - சிறிதளவு (கோலி குண்ட அளவு)
உப்பு - தேவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு - தேவைப்பட்டால் தாளிக்கவும்



செய்முறை :

* அடுப்பை மிதமான சூட்டில் கடாயை வைத்து, கடாய் சூடானதும் துவரம் பருப்பு, வர மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வதக்கவும். 

* சீரகம், பெருங்காயம் சேர்க்கவும்

* துவரம் பருப்பு பொன்னிறமாக ஆனதும் தேங்காய் துருவல், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* இந்த கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் பல்ஸ் மோடில் வைத்து அரைக்கவும், சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

* கெட்டியாக வரும் வரை அரைத்து, கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்தாலோ அல்லது தாளிக்காமலோ பரிமாறலாம்.

* இந்த துவரம் பருப்பு துவையலை சூடான சாதத்துடன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

* பேச்சுலர்ஸ், பிகினர்ஸ் ஆகியோருக்கு டக்கென்று செய்து, ஈஸியாக செய்யக் கூடியதாகவும் இது இருக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்