அன்டானரிவோ: குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கரில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த காலங்களை விட, சமீபகாலங்களாக அதிகரித்துள்ளது. இந்த குற்றங்களினால் பெண் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதில் இருந்து பெண் குழந்தைகளை பேணி காக்க பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் அடங்குவதாக இல்லை.. குற்ற எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
இந்த நிலையில், குற்றவியல் கொடுமைகளை தடுக்கும் பொருட்டு மடகாஸ்கரில் புதுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அது என்ன சட்டம் தெரியுமா?... குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடு தான் மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 2 கோடியே 80 லட்சம் தானாம். அங்கு தான் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த தீவில் கடந்த சில ஆண்டுகளாகவே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு மட்டும் 600 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதற்கான வழங்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கபட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொறுத்துப் பார்த்த மடகாஸ்கர் அரசு இப்போது பொங்கி எழுந்து விட்டது. சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் பொருட்டு குற்றவாளிகளுக்கு தண்டனையை கடுமையாக்க முடிவு செய்தது.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும்.
10 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது ரசாயன முறை மூலமோ ஆண்மை நீக்கப்படும்.
14 முதல் 17 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும். ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் அங்கீகாரம் பெற்று பின்ன ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
மடகாஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
நம்ம நாட்டிலும் இதை கொண்டு வர வேண்டும்.. இங்கும் பாலியல் குற்றவாளிகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது.
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}