சென்னை: திருப்புவனம் காவலாளி அஜித்குமார் போலீசாரால் கொடூரமான முறையில் அடித்து கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு தவெக கட்சி சார்பில் நாளை மறுநாள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார். இவர் கடந்த 28ம் தேதி கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தார். அஜித்குமார் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் பலியாகியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்குமார் மரணத்திற்கு காரணமானவர்களாக கூறப்பட்ட 6 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அஜித்குமார் மரண வழக்கில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அப்போது இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் காவல்துறைக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்?. யாருடைய உத்தரவினால் வழக்கு தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. தனிப்படையினர் யார் சொல்லி, எதன் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்தனர். புலனாய்வு செய்வதற்கு தான் காவல்துறை. அடிப்பதற்கு எதற்கு காவல்துறை? காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கிறதா? கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தை உடனே இடமாற்றம் செய்ய என்ன காரணம்? அதிக கல்வியறிவு கொண்ட மாநிலமான தமிழகத்தில் இப்படி நடப்பது ஏற்கத் தக்கது அல்ல. நீதித்துறை நடுவர் உடனே விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட் அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்தின் பிறப்பு உறுப்பு, வாய், காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளது. இந்த அரசு வழக்கை உணர்வு பூர்வமாக எடுத்து நியாயமான விசாரணையை சிபிசிஐடியின் சிறப்புக்குழுவாள் நடத்த வேண்டும். சட்ட விரோத மரணத்திற்கு காரணமான உயர் அதிகாரி உள்ளிட்ட அனைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கில் அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கூறியுள்ளது. வரும் காலங்களில் எந்த இடத்திலும் காவல்துறை இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எக்ஸ் தள பதிவில்,சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 03.07.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நமது கட்சித் தலைவர் விஜயின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}