சென்னை: அரசு பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடித் தொடங்குவதை உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அடுத்த 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அனன்யா ராதாகிருஷ்ணன் தனது மனுவில், "அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடித் தொடங்குவதை முழுமையாக உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், "முதலில் 'வந்தே மாதரம்' பாட வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டிருந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்" என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மத்திய அரசும், தமிழக மாநில அரசும் அடுத்த 8 வாரங்களுக்குள் தங்களது விளக்கமான பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக அறிவித்து, அதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. அரசு விழாக்கள், கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பது விதியாகும்.
இத்தகைய சூழலில், மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும், தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தக் கோரியும் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு அரசியல் மற்றும் சமூக அரங்கில் பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்யவுள்ள பதில் மனுக்களைப் பொறுத்தே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவின் போதும் கடைசியாக தமிழ்த்தாய் பாடப்பட்டது அரசியல் ரீதியாக பெரும்விவாதத்தை கிளப்பியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து இருந்தனர்.
ஜார்ஜ் பெர்னாட் ஷா.. இலக்கியத்தையும் சமூக சிந்தனையையும் இணைத்த அபூர்வ படைப்பாளி!
பழனியை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்திலும் முறைகேடு.. தீவிர விசாரணை
பிரதமர் நரேந்திர மோடியின் செல்ஃபி வீடியோவை முடக்கிய மெட்டா.. மன்னிப்பு கேட்டது!
சீனாவின் அடாவடி.. இந்திய எல்லை அருகே அதிநவீன J-20 போர் விமானங்களை குவித்து அக்கிரமம்!
இலங்கை தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு
அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு…
இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
வெயில்!
ஆடியிலே காத்தடிக்க .. மோகினியே நீவந்து மோதுகிறே!
{{comments.comment}}