சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் சங்கத்திற்கு கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அந்த நிர்வாகிககளின் பதவிக்காலம் முடிந்தும் கடந்த நான்கரை ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் அதே நிர்வாகிகள் விதிகளுக்கு முரணாக செயல்ப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த செப் 27ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின்
தலைவராக என்.எஸ் ரேவதியும், துணை தலைவராக ராஜலட்சுமியும், செயலாளராக பர்வீன், நூலகராக மார்க்கெரெட் லாரன்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சான்றிதழ்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}