சென்னை: நடிகையும் எம்.பி.யுமான ஜெயப்பிரதா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்தும், பிற நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
பின்னர் அரசியலில் புகுந்த இவர் சமாஜ்வாடிக் கட்சியில் ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். தற்போது பாஜகவில் இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநில அரசியலில் இவர் ஈடுபட்டுள்ளார். இவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

அதாவது முன்பு ஜெயப்பிரதா என்ற தியேட்டரை சென்னையில் நடத்தி வந்தார். அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இஎஸ்ஐக்காக பணம் பிடித்து விட்டு அதை செலுத்தாமல் இருந்து வந்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், எழும்பூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன் 5000 அபராதமும் விதித்து எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல்செய்தார் ஜெயப்பிரதா. அங்கு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. ஆனால் தண்டனை நிறுத்திவைக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் ஜெயப்பிரதா.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்றும், முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்தும் உத்தரவிட்டது. மேலும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள ரூ. 20 லட்சம் தொகையை இஎஸ்ஐக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால் ஜெயப்பிரதாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதையெல்லாம் செய்தால்தான் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}