சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை எதிர்த்து சீமான் அளித்த மனுத்தாக்கலில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கை முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கை ரத்து செய்வது தொடர்பாக நடிகை வியலட்சுமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகை விஜயலட்சுமி கொடுது்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகாரை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக விஜயலட்சுமி வாக்குமூலத்தை காவல்துறை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது சீமானின் முதல் மனைவியா விஜயலட்சுமி என்று நீதிபதி கேட்டபோது, விஜயலட்சுமிக்கும் - சீமானுக்கும் மதுரையில் வைத்து திருமணம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}