மதுரை: மதுரை ஆயி பூரணத்தம்மாள் தனக்குச் சொந்தமான மேலும் 91 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குத் தானமாக கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி பூரணத்தம்மாள். இவரது ஒரே மகள் ஜனனி காலமாகி விட்டார். மதுரை கனரா வங்கியில் வேலை பார்த்து வரும் பூரணத்தம்மாள் தனது மகள் நினைவாக, கொடிக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தனக்குச் சொந்தமான 1.52 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து அனைவரையும் நெகிழ வைத்தார். இதன் சந்தை மதிப்பு ரூ. 7 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இவரைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். இவரை நேரில் சந்தித்தும் வணங்கினார். இதையடுத்து தமிழ்நாடு அரசும் அவருக்கு முதலமைச்சர் சிறப்பு விருது அளித்து குடியரசு தின விழாவில் கெளரவித்தது.
இந்த நிலையில் மீண்டும் மக்களை நெகிழ வைக்கும் காரியத்தை செய்துள்ளார் பூரணத்தம்மாள். தனக்குச் சொந்தமான மேலும் 91 சென்ட் நிலத்தையும் அரசுப் பள்ளிக்கே எழுதிக் கொடுத்து விட்டார் பூரணத்தம்மாள். இதன் மதிப்பு ரூ. 3 கோடியாகும்.
அடுத்தடுத்து அரசுப் பள்ளிக்கூடத்திற்கு தனது நிலத்தை தானமாக அளித்து அனைவரது உள்ளத்திலும் மிகப் பெரிய இடத்தைப் பெற்றுள்ளதோடு, கல்விக்கு பூரணம்மாள் கொடுத்துள்ள இந்த முக்கியத்துவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.
"கல்வித்தந்தை" என்று கூறிக் கொள்ளும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.. அந்தப் பெயரை வைத்துக் கொண்டு, வசூல் வேட்டையாடி கல்லாக் கட்டுவோர்தான் அதிகம்.. ஆனால் உண்மையில்.. இவர்தான் பூரணத்தம்மாள்தான் உண்மையான "கல்வித்தாய்".. மனதார பாராட்டுவோம்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}